சரியான திட்டமிடலுக்கு பலன் கிடைச்சிருச்சு! - ஐஸ்வர்யா தனுஷ்




 Tamil Celebrity AISHWARYA DHANUSH SPEAKS ABOUT HIS '3' MOVIE இணையதளம் முழுக்கவே இதயம் வெடிக்க அலறி பாடிக் கொண்டிருக்கிறது தனுஷ் பாடிய பாடலை. ஐஸ்வர்யா இயக்கும் '3' படத்தில் வரும் 'வொய் திஸ் கொலை வெறிடி' என்ற பாடல்தான் இப்படி இளைஞர் பட்டாளத்தை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. "தத்து பித்துன்னு பாடுன பாட்டை தத்துவப் பாடல் மாதிரி எல்லாரும் கொண்டாடுறது கொஞ்சம் ஓவராதான் இருக்கு பாஸ்" என்று சிரிக்கிறார் தனுஷ். பக்கத்திலிருந்த ஐஸ்வர்யாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்படி தொடக்கமே ஜாலியான ஒரு சந்திப்பாக அமைந்து விட்டது. தொடர்ந்து பேசினார் ஐஸ்வர்யா.
நெட்ல ஹிட் ஆயிடுச்சுங்கறது நீங்களே கிளப்பிவிட்டது தானே..?
ப்ராமிஸ். இத நாங்களே எதிர்பார்க்கல. காரணம். நாங்க பாடலை நெட்ல போடவே இல்லை. பாட்டு முழுசா ஃபினிஷ் பண்ணாத நிலையிலேயே பாட்டை எடுத்து யாரோ நெட்ல விட்டிருக்காங்க. அதைக் கேட்டுட்டு நாமே முழுசா ரெக்கார்டிங் முடித்த பாட்டை நெட்ல போடலாமோன்னு ஐடியா பண்ணி போட்டோம். யாரோ தெரியாமல் செய்த விஷயம் எங்கள் பாடலை ஹிட் பண்ணிக் கொடுத்திருச்சு.
ஸ்ருதி - தனுஷ் கெமிஸ்ட்ரி எப்படி பொருந்தியிருக்கு?
தனுஷ் புது நடிகர் கிடையாது. ஸ்ருதிக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கு. அதோட ரெண்டு பேருக்கும் கதை ரொம்பவே பிடிச்சிருந்தது. ஸ்ருதி நடிப்புல இந்த படம் முக்கியமான படமா இருக்கும். தனுஷ் சின்னச் சின்ன ஆக்ஷன்ல அசத்தியிருக்கார்.
மழைப் பாடல் காட்சியில் தனுஷ் -ஸ்ருதி நெருக்கம் காட்டியிருக்காங்களே. ஷூட்டிங்கின்போது ஒரு மனைவியா இதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?
ரெண்டு பேரு தனியா இருந்தால் முத்தம் கொடுத்துக்கறது ஈஸி. சுற்றிலும் யூனிட்டே வேடிக்கை பார்க்குது. பக்கத்துலயே பொண்டாட்டி வேற உட்கார்ந்திருக்கேன். இந்த சூழல்ல தனுஷ், ஸ்ருதியோட காதல் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் பாருங்க. எனக்கு அதெல்லாம் எதுவும் தோணாது. சீன் நல்லா வரலன்னா மறுபடியும் கிஸ் பண்ணதான் சொல்லுவேன். நான் திருப்தியாகும் வரை விடமாட்டேன். தட்ஸ் ஆல்.
மியூசிக் டைரக்டர் அனிருத்திற்கு இந்த வருட ஹிட் கிடைச்சாச்சு போலிருக்கே?
படம் பண்ணும் போதே நாம ஒரு புது யூத் டீம் அமைக்கலாம்னு ப்ளான் பண்ணிதான் அனிருத்தை செலக்ட் பண்ணினேன். அது பலிச்சிடுச்சு. நானே மியூசிக் டைரக்டர்கிட்ட உட்கார்ந்து பாட்டு வாங்க நினைச்சேன். அப்படியே பண்ணினேன். சரியான திட்டமிடலுக்கு பலனா இப்பவே சக்ஸஸ் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
அமலா பால் நடிப்பை ஸ்ருதிகிட்ட வாங்கிட்டீங்களா?
இந்த கேரக்டருக்கு ஸ்ருதியை நினைச்சுதான் ஸ்கிரிப்ட்டே எழுதினேன். டேட் குழப்பங்கள்னால அமலாவை பண்ண வைக்கலாம்னு நினைச்சோம். ஸ்ருதி தேதியை அட்ஜஸ்ட் பண்ணி தந்ததால அவங்களே பண்ணட்டுமேனு ஆசைப்பட்டேன். எது யாருக்கு கிடைக்கணும்னு முடிவாகியிருக்கோ அதுதான் அவங்களுக்குக் கிடைக்கும். மற்றபடி அமலா நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது.
அப்பாவின் 'கோச்சடையான்' படத்தில் உங்க பங்களிப்பு இருக்குமோ?
நிச்சயமா இல்லை. என் படத்திற்கே எனக்கு நேரம் பத்தலை. ஓடிக்கிட்டே இருக்கேன்.




Share your views...

0 Respones to "சரியான திட்டமிடலுக்கு பலன் கிடைச்சிருச்சு! - ஐஸ்வர்யா தனுஷ்"

Post a Comment

 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King