பிளாட்டினத்தை விரும்பும் வைரம்! (Amala Paul launches Nathella Kama Platinum Collections)
'ஆவின்பால் பிடிக்காத, குடிக்காத சிறுவர்கள், பெரியவர்கள்கூட அமலா பாலை பிடிக்கும்' எனும் அளவிற்கு ஃபீல்டில் பிஸியாக இருக்கும் அமலா பாலுக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தானாம்! சென்னை, அண்ணாநகர், 12-வது மெயின்ரேட்டில் அமைந்துள்ள நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுகவிழாவில் கலந்து கொண்டு பிளாட்டினம் நகைகளை அறிமுகம் செய்து வைத்து மீடியாக்களிடம் பேசிய அமலா பால், எனக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தான். எனக்கும் மட்டுமல்ல, என் வயதை ஒத்த இந்த காலத்து பெண்கள் மிகவும் விரும்புவதும் பிளாட்டினம் நகைகளைத்தான். அதன் வெளிப்பாடாகத்தான் இங்கு, புதிய வகை பிளாட்டினம் நகைகளை அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்து வைக்க சம்மதித்தேன். மும்பையில் பிளாட்டினம் நகைகளுக்கு பிரபலமான காமா ஜுவல்லரி, சென்னையில் நாதெள்ளா ஜுவல்லரி மூலம் தங்களது காமா பிளாட்டினம் நகைகளை இந்த அட்சய திருதியை முதல் விற்பனை செய்ய இருப்பது என் மாதிரி பிளாட்டின பிரியைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இனி எனது பெரும்பாலான ஷாப்பிங் இந்த நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் செக்ஷனிலேயே இருக்கும்! என்று பேசிய அமலா, மீடியாக்களின் மைக்குகளிலும் தனித்தனியாக பிளாட்டினம் நகைகள் பற்றி பெருமையாக பெருவாரியாக பேசி சென்றது ஆச்சரியம்! இவ்விழாவிற்கு பிளாட்டினம் நகைகளை அணிந்து வந்திருந்தார் அமலா பால் என்பது கூடுதல் ஆச்சர்யம்! அவருடன் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுக விழாவில் நாதெள்ளா ஜுவல்லரியின் இயக்குநர் பிரப்பன் குமாரும். காமா ஜுவல்லரியின் இணைய அதிபர் பினாய் கோயங்காவும் உடன் இருந்து நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். இங்க தங்கத்துக்கே தரிகிட தத்தோம்... இதுல பிளாட்டினம் வேறயா..? பாவம் அப்பா(வி)கள்!சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்-கார்த்திகா (Vishal, Karthika in Sundar C's Next)
நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியின் 26-வது படத்தில் விஷால்- கார்த்திகா நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான தலைப்பு இன்றும் தேர்வு செய்யப்படாத நிலையில் வருகிற 24-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடி, கவர்ச்சி, ஆக்ஷன், சென்டிமென்ட் ஆகியவை கலந்த படமாக இருக்கும் என்ற ரசிகர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக இப் படம் உருவாக உள்ளதாம். விஷாலுக்கு இந்த படத்தில் மூன்று வேடங்களாம். விஷாலுக்கு ஏற்ற உயரமான நடிகையாக கார்த்திகா இருப்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறாராம் சுந்தர்.சி. கலகலப்பு குறையறதுக்குள்ள ஒரு விறுவிறுப்பா...?! மனுஷன் படு ஸ்பீடாத்தான் இருக்காரு...........கடும் போட்டியில் த்ரி-நயன்! (Trisha Vs Nayanthra)
நாயகர்களுக்கு இடையே போட்டி நடப்பது போலவே நாயகிகளுக்கு இடையே போட்டி துவங்கி இருக்கிறது. த்ரிஷா - நயன்தாரா இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... விஜய் நடித்த 'குருவி' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. ஆனால் அப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வெளியானது. அப்போது தான் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஆரம்பமானது. நயன்தாரா - பிரபுதேவா இடையேயான காதல் பிரிவிற்கு பிறகு பிரபுதேவா அளித்த விருந்து ஒன்றில் பிரபுதேவாவுடன் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. சில மாதங்களாக திரைப்பட நடிப்பை நிறுத்தியிருந்த நயன்தாரா, தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. முதலில் கோபிசந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமானவர், அடுத்ததாக ராணா நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராணா - த்ரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் கதை என்ன என்று கேட்காமல் உடனே ஒகே என்று கூறிவிட்டாராம் நயன். த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த ஒரு விளம்பரத்திற்கு தற்போது நயன் ஒப்பந்தமாகி இருக்கிறார். யம்மாடியோவ்! குடும்பிய பிடிக்காம விட்டாங்களே.....கரீனாவுக்கு இணையா வந்துட்டேன் - அசின் அலட்டல்! (Has the success of 'Housefull 2' gone to Asin's head?)
அசின் இந்தியில் 'கஜினி' படம் மூலம் அறிமுகமானார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. முதல் படத்திலேயே முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். இந்தியில் ஏற்கனவே கரீனா கபூர் முதல் இடத்தில் உள்ளார். அவர் நடித்து ரிலீசான '3 இடியட்ஸ்', 'பாடிகார்ட்', 'ரா ஒன்' படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் குவித்தன. எனவே முதல் இடத்தை தொடர்ந்து அவர் தக்க வைத்து வருகிறார். அசின் நடித்த 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் தோல்வி அடைந்ததால் அவர் மார்க்கெட் சரிந்தது. ஆனால் அவரது ரெடி படமும், சமீபத்தில் ரிலீசான 'ஹவுஸ்புல் 2' படமும் ஹிட்டாயின. ரெடி வசூல் ரூ. 100 கோடியை தாண்டியது. 'ஹவுஸ்புல்' படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படமும் ரூ. 100 கோடி வசூலை தாண்டும் என்கின்றனர். இதுகுறித்து அசின் கூறும்போது, இந்தியில் நான் ஏற்கனவே நடித்த இரு படங்கள் ரூ. 100 கோடி வசூல் ஈட்டின. 'ஹவுஸ்புல்' படமும் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. எனவே நானும் இந்தியில் நம்பர் 1 நடிகையாகி விட்டேன். கரீனா கபூருக்கு இணையாக என் படங்களும் வசூல் குவிக்கின்றன என்றார். தலைக்கனம் தலைய தட்டாம பாத்துக்கோங்கம்ணி........கௌதம் எனக்கு எப்போதும் நன்மைதான் செய்வார்: சமந்தா (Gautham Menon will always do good to me: Samantha)
'எனக்கு எல்லாமே கௌதம் மேனன்தான்' என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி' படங்களில் நடித்தவர் சமந்தா. இப்படங்கள் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது இயக்குநர் கௌதம் மேனன் பார்வை திரும்பியது. அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தை கௌதம் இயக்குகிறார். இந்த 3 படங்களுக்கு வெவ்வேறு ஹீரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் 3 மொழியிலும் ஹீரோயின் சமந்தாதான். இதுபற்றி சமந்தா கூறியதாவது: இப்போதைக்கு இந்தி படம் எதிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனாலும் கௌதம் மேனன் இயக்கும் இந்தி உள்ளிட்ட 3 மொழி படத்தில் நடிக்கிறேன். 3 மொழியிலும் ஒரே ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் ஒப்புக்கொண்டேன். அவரது கணிப்பை மதிக்கிறேன். எப்போதுமே அவர் எனக்கு நன்மைதான் செய்வார். அவர் என் குரு. எனக்கு எல்லாமும் அவர்தான். மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் என்ன வேடம் என்கிறார்கள். அது மிகவும் ரகசியம். இப்போதைக்கு அதுபற்றி சொல்லமாட்டேன். இந்த வருடம் எனக்கு சுமார் 8 படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற எண்ணுகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன் என்றார். ரொம்ப கஷ்டப்படாதீங்க.. அப்பறம் 'அவரு' மனசு தாங்காது.......அது ரொம்ப தப்புனு இப்ப புரியது: நயன்தாரா! (Nayanthara denies rumours linking Trisha)
நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபுதேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன். பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு. தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும். த்ரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. பட்டதுக்கப்புறந்தானே புத்தி வரும்!ஆட்டோ டிரைவர் வீட்டு விசேஷத்தில் அமீர்கான்! (Aamir Khan attends Varanasi autorickshaw driver's family wedding)
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த, 'த்ரீ இடியட்ஸ்' இந்தி படத்தின் விளம்பரத்தின்போது, ஆட்டோ டிரைவர் ராம் லக்கன் பஸ்வான் என்பவரது நட்பு அமீர்கானுக்கு கிடைத்தது. இதையடுத்து, "தன் மகன் ராஜிவ் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என, ஆட்டோ டிரைவர் கேட்டுக் கொண்டார். திருமணத்தில் நிச்சயம் கலந்துகொள்கிறேன் என, அமீர்கான் உறுதி அளித்தார். ஓராண்டுக்கு முன் அளித்த உறுதிமொழியை நினைவில் வைத்திருந்த அமீர்கான் மறக்காமல், உத்தரபிரதேசம் வாரணாசியில் நடந்த அந்த திருமணத்திற்காக புதன்கிழமை நள்ளிரவு அங்கு சென்றார். முதலில் தன் மாமா வீட்டுக்கு சென்ற அவர், பின்னர் திருமணம் நடந்த மெக்முர்கஞ்ச் சாருயாஸ்யா மண்டபத்திற்கு சென்றார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால், அங்கு குழப்பம் நீடித்தது. மேலும், அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்தது. பதட்டமடையாத அமீர்கான் சமாளித்து மேடையிலேயே நின்றார். தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய அமீர்கான், "ஆட்டோ டிரைவர் என் நண்பர். அவரது மகன் ராஜிவ் விஜியதா திருமணத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணத்தில் கலந்துகொள்ளவே இங்கு வந்தேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்ல" என்றார். மண மேடையில் மணமக்களுடன் நல்ல மனசுகளையும் பார்க்க முடியுதே.....

