தமிழில் சிறந்த கதையை எதிர்பார்த்திருப்பதாக, ரிச்சா கங்கோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில், தனுஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் என்னை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. இந்தப் பட ஷூட்டிங்கின் போது சிம்புவும், தனுஷும் தமிழ் பேசுவதற்கு உதவி செய்தனர். இருவரும் பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்கள். இருவருடனும் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இப்போது எனது தாய்மொழியான பெங்காலியில் 'பிக்ரம் சிங்கா' படத்தில் நடித்துள்ளேன். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். பெங்காலிக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தாய்மொழியில் நடிப்பது எப்போதும் சுகமானது. தெலுங்கில் பிரபாஸூடன் 'வாராதி' என்ற படத்தில் நடித்துவருகிறேன். தமிழில் அடுத்த படம் என்ன என்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருகிறேன். தமிழிலும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். நடித்த கேரக்டரிலேயே நடிக்க எனக்கு உடன்பாடில்லை. இதுவரை எட்டு கதைகள் கேட்டேன். எனக்கு திருப்தியாக இல்லாததால் நிராகரித்தேன். இந்த செர்ரி அம்புட்டு பிஸியாகிடுச்சா....?
Share your views...
0 Respones to "8-க்கும் நோ சொன்ன ரிச்சா! (Richa rejects eight stories )"
Share your views...
0 Respones to "8-க்கும் நோ சொன்ன ரிச்சா! (Richa rejects eight stories )"
Post a Comment