'ஆவின்பால் பிடிக்காத, குடிக்காத சிறுவர்கள், பெரியவர்கள்கூட அமலா பாலை பிடிக்கும்' எனும் அளவிற்கு ஃபீல்டில் பிஸியாக இருக்கும் அமலா பாலுக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தானாம்! சென்னை, அண்ணாநகர், 12-வது மெயின்ரேட்டில் அமைந்துள்ள நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுகவிழாவில் கலந்து கொண்டு பிளாட்டினம் நகைகளை அறிமுகம் செய்து வைத்து மீடியாக்களிடம் பேசிய அமலா பால், எனக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தான். எனக்கும் மட்டுமல்ல, என் வயதை ஒத்த இந்த காலத்து பெண்கள் மிகவும் விரும்புவதும் பிளாட்டினம் நகைகளைத்தான். அதன் வெளிப்பாடாகத்தான் இங்கு, புதிய வகை பிளாட்டினம் நகைகளை அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்து வைக்க சம்மதித்தேன். மும்பையில் பிளாட்டினம் நகைகளுக்கு பிரபலமான காமா ஜுவல்லரி, சென்னையில் நாதெள்ளா ஜுவல்லரி மூலம் தங்களது காமா பிளாட்டினம் நகைகளை இந்த அட்சய திருதியை முதல் விற்பனை செய்ய இருப்பது என் மாதிரி பிளாட்டின பிரியைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இனி எனது பெரும்பாலான ஷாப்பிங் இந்த நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் செக்ஷனிலேயே இருக்கும்! என்று பேசிய அமலா, மீடியாக்களின் மைக்குகளிலும் தனித்தனியாக பிளாட்டினம் நகைகள் பற்றி பெருமையாக பெருவாரியாக பேசி சென்றது ஆச்சரியம்! இவ்விழாவிற்கு பிளாட்டினம் நகைகளை அணிந்து வந்திருந்தார் அமலா பால் என்பது கூடுதல் ஆச்சர்யம்! அவருடன் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுக விழாவில் நாதெள்ளா ஜுவல்லரியின் இயக்குநர் பிரப்பன் குமாரும். காமா ஜுவல்லரியின் இணைய அதிபர் பினாய் கோயங்காவும் உடன் இருந்து நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். இங்க தங்கத்துக்கே தரிகிட தத்தோம்... இதுல பிளாட்டினம் வேறயா..? பாவம் அப்பா(வி)கள்!
Share your views...
0 Respones to "பிளாட்டினத்தை விரும்பும் வைரம்! (Amala Paul launches Nathella Kama Platinum Collections)"
Share your views...
0 Respones to "பிளாட்டினத்தை விரும்பும் வைரம்! (Amala Paul launches Nathella Kama Platinum Collections)"
Post a Comment