நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு! - சமீரா ரெட்டி

உங்களைப் பத்தி ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்?
நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு. மனசுல பட்டதைச் சொல்ற கேரக்டர்.
ஜிவ்வுன்னு இருக்கீங்களே.. உங்களுக்குப் பிடிச்சது கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர் கேரக்டரா இல்ல ஹோம்லி கேரக்டரா?
உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கணும்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலின்னு எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீங்களே. எப்படி மொழி தெரியாம சமாளிக்கிறீங்க?
மொழி ஒரு பிரச்சினையே இல்ல. எமோஷனை பக்காவாக புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடிச்சாலே போதும்.
கிளாமராக நடிக்கிறது ஈஸிதானே?
ஹலோ பாஸ், யார் அப்படிச் சொன்னது?
யார் கூட நடிக்கணும்னு ஒரு தீராத ஆசை இருக்கு?
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கூட நடிச்சே ஆகணும்.
யார் கூட கொண்டாட்டமா ஒரு ஆட்டம் போட ஆசை?
டான்ஸ் கிங் விஜய் கூட கலக்கல் ஆட்டம் போடணும்.
எப்போதும் கேம் விளையாடிக்கிட்டு, ரொம்ப ஜாலியா, விளையாட்டுத்தனமாகவே இருக்கீங்களே?
ம்ம்ம்.. எனக்கு கேம்ஸ்தான் பொழுதுபோக்கு. இந்த 'ஆங்க்ரி பேர்ட்ஸ்' கேம் விளையாடுறதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னே தெரியல.
வீரதீர சாகசத்திலும் நீங்க கில்லாடின்னு கேள்விப்பட்டோமே?
ஆமா. ஸ்கூபா டைவிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமையல் விஷயத்திலும் அதிரடியாக இறங்குறது எனக்குப் பிடிச்ச விஷயம்.
அலட்டல் இல்லாம கிறங்கடிக்கிற அழகுக்கு என்ன காரணம்?
கொஞ்சமா சாப்பிடுவேன். ரெகுலராக யோகா பண்றேன். அம்மாவுக்கு ஆயுர்வேதம் முறை தெரியும். அதனால ஆரோக்கியத்துக்கும் பிரச்சினை இல்ல.
உங்க பர்ஸனாலிட்டிய பார்த்தா லவ் மேரேஜ்தான் பண்ணுவீங்க போலிருக்கு?
கைக் கொடுங்க தலைவா.. சரியா சொன்னீங்க.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு! - சமீரா ரெட்டி"
Post a Comment