பிளாட்டினத்தை விரும்பும் வைரம்! (Amala Paul launches Nathella Kama Platinum Collections)



Amala Paul launches Nathella Kama Platinum Collections'ஆவின்பால் பிடிக்காத, குடிக்காத சிறுவர்கள், பெரியவர்கள்கூட அமலா பாலை பிடிக்கும்' எனும் அளவிற்கு ஃபீல்டில் பிஸியாக இருக்கும் அமலா பாலுக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தானாம்! சென்னை, அண்ணாநகர், 12-வது மெயின்ரேட்டில் அமைந்துள்ள நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுகவிழாவில் கலந்து கொண்டு பிளாட்டினம் நகைகளை அறிமுகம் செய்து வைத்து மீடியாக்களிடம் பேசிய அமலா பால், எனக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தான். எனக்கும் மட்டுமல்ல, என் வயதை ஒத்த இந்த காலத்து பெண்கள் மிகவும் விரும்புவதும் பிளாட்டினம் நகைகளைத்தான். அதன் வெளிப்பாடாகத்தான் இங்கு, புதிய வகை பிளாட்டினம் நகைகளை அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்து வைக்க சம்மதித்தேன். மும்பையில் பிளாட்டினம் நகைகளுக்கு பிரபலமான காமா ஜுவல்லரி, சென்னையில் நாதெள்ளா ஜுவல்லரி மூலம் தங்களது காமா பிளாட்டினம் நகைகளை இந்த அட்சய திருதியை முதல் விற்பனை செய்ய இருப்பது என் மாதிரி பிளாட்டின பிரியைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இனி எனது பெரும்பாலான ஷாப்பிங் இந்த நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் செக்ஷனிலேயே இருக்கும்! என்று பேசிய அமலா, மீடியாக்களின் மைக்குகளிலும் தனித்தனியாக பிளாட்டினம் நகைகள் பற்றி பெருமையாக பெருவாரியாக பேசி சென்றது ஆச்சரியம்! இவ்விழாவிற்கு பிளாட்டினம் நகைகளை அணிந்து வந்திருந்தார் அமலா பால் என்பது கூடுதல் ஆச்சர்யம்! அவருடன் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுக விழாவில் நாதெள்ளா ஜுவல்லரியின் இயக்குநர் பிரப்பன் குமாரும். காமா ஜுவல்லரியின் இணைய அதிபர் பினாய் கோயங்காவும் உடன் இருந்து நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். இங்க தங்கத்துக்கே தரிகிட தத்தோம்... இதுல பிளாட்டினம் வேறயா..? பாவம் அப்பா(வி)கள்!


Read More Add your Comment 0 comments


சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்-கார்த்திகா (Vishal, Karthika in Sundar C's Next)



Vishal, Karthika in Sundar C's Nextநடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியின் 26-வது படத்தில் விஷால்- கார்த்திகா நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான தலைப்பு இன்றும் தேர்வு செய்யப்படாத  நிலையில் வருகிற 24-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடி, கவர்ச்சி, ஆக்ஷன், சென்டிமென்ட் ஆகியவை கலந்த படமாக இருக்கும் என்ற ரசிகர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக இப் படம் உருவாக உள்ளதாம். விஷாலுக்கு இந்த படத்தில் மூன்று வேடங்களாம். விஷாலுக்கு ஏற்ற உயரமான நடிகையாக கார்த்திகா இருப்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறாராம் சுந்தர்.சி. கலகலப்பு குறையறதுக்குள்ள ஒரு விறுவிறுப்பா...?! மனுஷன் படு ஸ்பீடாத்தான் இருக்காரு...........


Read More Add your Comment 0 comments


கடும் போட்டியில் த்ரி-நயன்! (Trisha Vs Nayanthra)



Trisha Vs Nayanthraநாயகர்களுக்கு இடையே போட்டி நடப்பது போலவே நாயகிகளுக்கு இடையே போட்டி துவங்கி இருக்கிறது. த்ரிஷா - நயன்தாரா இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... விஜய் நடித்த 'குருவி' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. ஆனால் அப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வெளியானது. அப்போது தான் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஆரம்பமானது. நயன்தாரா - பிரபுதேவா இடையேயான காதல் பிரிவிற்கு பிறகு பிரபுதேவா அளித்த விருந்து ஒன்றில் பிரபுதேவாவுடன் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. சில மாதங்களாக திரைப்பட நடிப்பை நிறுத்தியிருந்த நயன்தாரா, தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. முதலில் கோபிசந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமானவர், அடுத்ததாக ராணா நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராணா - த்ரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் கதை என்ன என்று கேட்காமல் உடனே ஒகே என்று கூறிவிட்டாராம் நயன். த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த ஒரு விளம்பரத்திற்கு தற்போது நயன் ஒப்பந்தமாகி இருக்கிறார். யம்மாடியோவ்! குடும்பிய பிடிக்காம விட்டாங்களே.....


Read More Add your Comment 0 comments


கரீனாவுக்கு இணையா வந்துட்டேன் - அசின் அலட்டல்! (Has the success of 'Housefull 2' gone to Asin's head?)



Has the success of 'Housefull 2' gone to Asin's head?அசின் இந்தியில் 'கஜினி' படம் மூலம் அறிமுகமானார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. முதல் படத்திலேயே முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். இந்தியில் ஏற்கனவே கரீனா கபூர் முதல் இடத்தில் உள்ளார். அவர் நடித்து ரிலீசான '3 இடியட்ஸ்', 'பாடிகார்ட்', 'ரா ஒன்' படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் குவித்தன. எனவே முதல் இடத்தை தொடர்ந்து அவர் தக்க வைத்து வருகிறார். அசின் நடித்த 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் தோல்வி அடைந்ததால் அவர் மார்க்கெட் சரிந்தது. ஆனால் அவரது ரெடி படமும், சமீபத்தில் ரிலீசான 'ஹவுஸ்புல் 2' படமும் ஹிட்டாயின. ரெடி வசூல் ரூ. 100 கோடியை தாண்டியது. 'ஹவுஸ்புல்' படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படமும் ரூ. 100 கோடி வசூலை தாண்டும் என்கின்றனர். இதுகுறித்து அசின் கூறும்போது, இந்தியில் நான் ஏற்கனவே நடித்த இரு படங்கள் ரூ. 100 கோடி வசூல் ஈட்டின. 'ஹவுஸ்புல்' படமும் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. எனவே நானும் இந்தியில் நம்பர் 1 நடிகையாகி விட்டேன். கரீனா கபூருக்கு இணையாக என் படங்களும் வசூல் குவிக்கின்றன என்றார். தலைக்கனம் தலைய தட்டாம பாத்துக்கோங்கம்ணி........


Read More Add your Comment 0 comments


கௌதம் எனக்கு எப்போதும் நன்மைதான் செய்வார்: சமந்தா (Gautham Menon will always do good to me: Samantha)



Gautham Menon will always do good to me: Samantha'எனக்கு எல்லாமே கௌதம் மேனன்தான்' என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி' படங்களில் நடித்தவர் சமந்தா. இப்படங்கள் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது இயக்குநர் கௌதம் மேனன் பார்வை திரும்பியது. அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தை கௌதம் இயக்குகிறார். இந்த 3 படங்களுக்கு வெவ்வேறு ஹீரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் 3 மொழியிலும் ஹீரோயின் சமந்தாதான். இதுபற்றி சமந்தா கூறியதாவது: இப்போதைக்கு இந்தி படம் எதிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனாலும் கௌதம் மேனன் இயக்கும் இந்தி உள்ளிட்ட 3 மொழி படத்தில் நடிக்கிறேன். 3 மொழியிலும் ஒரே ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் ஒப்புக்கொண்டேன். அவரது கணிப்பை மதிக்கிறேன். எப்போதுமே அவர் எனக்கு நன்மைதான் செய்வார். அவர் என் குரு. எனக்கு எல்லாமும் அவர்தான். மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் என்ன வேடம் என்கிறார்கள். அது மிகவும் ரகசியம். இப்போதைக்கு அதுபற்றி சொல்லமாட்டேன். இந்த வருடம் எனக்கு சுமார் 8 படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற எண்ணுகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன் என்றார். ரொம்ப கஷ்டப்படாதீங்க.. அப்பறம் 'அவரு' மனசு தாங்காது.......


Read More Add your Comment 0 comments


அது ரொம்ப தப்புனு இப்ப புரியது: நயன்தாரா! (Nayanthara denies rumours linking Trisha)



Nayanthara denies rumours linking Trishaநயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபுதேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன். பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு. தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும். த்ரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. பட்டதுக்கப்புறந்தானே புத்தி வரும்!


Read More Add your Comment 0 comments


ஆட்டோ டிரைவர் வீட்டு விசேஷத்தில் அமீர்கான்! (Aamir Khan attends Varanasi autorickshaw driver's family wedding)



Aamir Khan attends Varanasi autorickshaw driver's family weddingபாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த, 'த்ரீ இடியட்ஸ்' இந்தி படத்தின் விளம்பரத்தின்போது, ஆட்டோ டிரைவர் ராம் லக்கன் பஸ்வான் என்பவரது நட்பு அமீர்கானுக்கு கிடைத்தது. இதையடுத்து, "தன் மகன் ராஜிவ் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என, ஆட்டோ டிரைவர் கேட்டுக் கொண்டார். திருமணத்தில் நிச்சயம் கலந்துகொள்கிறேன் என, அமீர்கான் உறுதி அளித்தார். ஓராண்டுக்கு முன் அளித்த உறுதிமொழியை நினைவில் வைத்திருந்த அமீர்கான் மறக்காமல், உத்தரபிரதேசம் வாரணாசியில் நடந்த அந்த திருமணத்திற்காக புதன்கிழமை நள்ளிரவு அங்கு சென்றார். முதலில் தன் மாமா வீட்டுக்கு சென்ற அவர், பின்னர் திருமணம் நடந்த மெக்முர்கஞ்ச் சாருயாஸ்யா மண்டபத்திற்கு சென்றார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால், அங்கு குழப்பம் நீடித்தது. மேலும், அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்தது. பதட்டமடையாத அமீர்கான் சமாளித்து மேடையிலேயே நின்றார். தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய அமீர்கான், "ஆட்டோ டிரைவர் என் நண்பர். அவரது மகன் ராஜிவ் விஜியதா திருமணத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணத்தில் கலந்துகொள்ளவே இங்கு வந்தேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்ல" என்றார். மண மேடையில் மணமக்களுடன் நல்ல மனசுகளையும் பார்க்க முடியுதே.....


Read More Add your Comment 1 comments


நண்பனை ஹீரோவாக்கிய தனுஷ் (Dhanush to produce Siva Karthikeyan?)



Dhanush to produce Siva Karthikeyan?'3' படத்தில் தனுஷுக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தினார். இவர்களது கூட்டணி செம காமெடியாக இருந்தது. இதனையடுத்து, வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையான இந்த படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ். பரவாயில்ல... ஈகோ இல்லாம நண்பன தூக்கி விட நெனைக்கிறாரே. ஒருவேள.... இதுல சைக்கோ கேரக்டர் இல்லையோ என்னவோ?


Read More Add your Comment 0 comments


8-க்கும் நோ சொன்ன ரிச்சா! (Richa rejects eight stories )



Richa rejects eight stories தமிழில் சிறந்த கதையை எதிர்பார்த்திருப்பதாக, ரிச்சா கங்கோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில், தனுஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் என்னை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. இந்தப் பட ஷூட்டிங்கின் போது சிம்புவும், தனுஷும் தமிழ் பேசுவதற்கு உதவி செய்தனர். இருவரும் பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்கள். இருவருடனும் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இப்போது எனது தாய்மொழியான பெங்காலியில் 'பிக்ரம் சிங்கா' படத்தில் நடித்துள்ளேன். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். பெங்காலிக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தாய்மொழியில் நடிப்பது எப்போதும் சுகமானது. தெலுங்கில் பிரபாஸூடன் 'வாராதி' என்ற படத்தில் நடித்துவருகிறேன். தமிழில் அடுத்த படம் என்ன என்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருகிறேன். தமிழிலும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். நடித்த கேரக்டரிலேயே நடிக்க எனக்கு உடன்பாடில்லை. இதுவரை எட்டு கதைகள் கேட்டேன். எனக்கு திருப்தியாக இல்லாததால் நிராகரித்தேன். இந்த செர்ரி அம்புட்டு பிஸியாகிடுச்சா....?


Read More Add your Comment 0 comments


ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கிய அஜித்! (Ajith's daring stunt in Billa 2)



Ajith's daring stunt in Billa 2'பில்லா 2' படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர். வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள். இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜித்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள். மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறுகூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜித் போடும் சண்டைக் காட்சி அது. நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜித், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார். மிரட்டிட்டீங்க போங்க....... இனி ஒங்க ஃபேன்ஸ் தூங்க மாட்டாங்களே......


Read More Add your Comment 0 comments


முத்தம் கொடுக்கிறது ஒரு அழகான விஷயம்! - சமீரா ரெட்டி




 Tamil Celebrity KISSING IS A CUTE FEELING: SAMEERA REDDY ஸ்காட்ச் விஸ்கியின் நிறத்தில் போதையூட்டுகிறார் சமீரா ரெட்டி. ஐந்தடி ஆறு அங்குல உயரத்தில், கச்சிதமான அழகியாக விஷாலுடன் 'வெடி'த்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம். நம் கண்களைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார்.
இப்போ திடீர்னு தமிழ் சினிமா மேல என்ன கரிசனம்? தொடர்ந்து படங்கள் பண்றீங்க போல...
ஆமாம். என் கவனம் இப்போ தமிழ் சினிமா மேலதான். காரணம் தமிழ் ரசிகர்கள். ஒரு ஹிந்திப் படத்தோட ஷூட்டிங்குக்காக காரைக்குடிக்குப் போயிருந்தோம். அங்குள்ள மக்கள் என்னை ஒரு தமிழ் ஹீரோயினாகத்தான் பார்த்தாங்க. பேசுனாங்க. சந்தோஷப்பட்டாங்க. நான் உருகிப் போய்ட்டேன். இனிமேல் எனக்கு தமிழ் ரசிகர்கள்தான் முக்கியம்.
நீங்க 'கிஸ்ஸிங் கில்லாடி'யா? விஷாலுடன் கிஸ் மழை பொழிஞ்சிருக்கீங்க போல..
கிஸ் கொடுத்தா அது கன்னத்துல மட்டும்தான் என்கிறதுல நான் தெளிவாக இருக்கேன். லிப் கிஸ்ஸூக்கு சான்ஸே இல்ல. அப்படி கொடுக்கிறதுல எனக்கு விருப்பமும் இல்ல. முத்தம் கொடுக்கிறது ஒரு அழகான விஷயம். எமோஷனலானது. சென்டிமெண்டலானது. க்யூட்டானது. அது ஆக்டிங்காக இருந்தாலும் க்யூட்டாக கொடுக்கணும். நான் கொடுக்கிற முத்தத்தைப் பார்த்தால், காதலி அவங்களோட காதலருக்கு அப்படியொரு முத்தத்தை அன்பாக கொடுக்கிற மாதிரி இருக்கணும்னு நினைப்பேன்.
உங்களோட மேனரிஸத்தைப் பார்க்கும்போது ரொம்ப தைரியசாலிப் பொண்ணு மாதிரி தெரியுதே?
உண்மையைச் சொல்லட்டுமா.. நான் தைரியசாலி இல்ல. பார்க்கத்தான் அப்படித் தெரியும். எனக்கு கூச்சம் ரொம்ப அதிகம், நம்புங்க.
கூச்சம் அதிகம்னு சொல்றீங்க. ஆனால் மினி ஸ்கர்ட்ல வந்து சூட்டைக் கிளப்புறீங்க. அதுமட்டும் எப்படி?
சினிமா என்னோட புரொஃபஷன். அதனால மினி ஸ்கர்ட் அவசியம்னா அணியத்தான் வேணும். ஆனால் வீட்டுல நான் மினி ஸ்கர்ட் அணியவே மாட்டேன். எங்கப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நான் நடிக்க வந்ததே ஆரம்பத்துல அப்பாவுக்குப் பிடிக்கல. இப்பதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் ஆயிருக்கார்.


Read More Add your Comment 0 comments


காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க! - சரவணன்




 Tamil Celebrity DIRECTOR SARAVANAN SPEAKS ABOUT HIS ENGEYUM EPPOTHUM MOVIE SUCCESS கல்லூரி மாணவன்போல இருக்கிறார் எம்.சரவணன். 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர்! அறையில் மலர்ந்துகிடக்கின்றன பொக்கே குவியல்கள். பதற்றமும் சலனமும் இல்லாத நிதானத்துடன் பேசத் துவங்குகிறார்.
"சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடையது. நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிற வரகூர்தான் என் கிராமம். விவசாயம்தான் தொழில். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பாட்டனி படிச்சேன். ரிசல்ட்டுக்குக்கூடக் காத்திருக்கலை. சென்னைக்கு வந்துட்டேன். வீட்ல அம்மாவுக்கு எதுவும் தெரியாது. 'அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு போஸ்ட்டுக்கு முயற்சி பண்றேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். அக்காவுக்கு மட்டும் தெரியும். 'நம்பிக்கை இருந்தா போயிட்டு வா தம்பி'னு அனுப்பி வெச்சாங்க. எந்தக் கஷ்டமும் படலை.
சினிமாவுக்கு வந்தால், சென்னையில் எல்லோருக்கும் ஒரு பெரிய கதை இருக்கும். எனக்கு மலர்ப் படுக்கையில் நடந்த மாதிரி நிறைய சந்தோஷங்கள் நினைவுக்கு வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங்கனு சொல்வாங்க. ஆனா, எனக்குக் கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். என் நண்பர் ஜெகன் ஒருத்தரைக் காண்பிச்சு, 'இவர் பெரிய ஆளா வருவார். இவர்கிட்ட அறிமுகம் ஆகிக்கோ'னு சொன்னார். அவருக்கு வணக்கம் போட்டு வெச்சேன். அந்தச் சமயம் அவர் படம்கூடப் பண்ணலை. அப்புறம் 'தீனா'னு அஜித்தை வெச்சுப் படம் பண்ண ஆரம்பிச்ச அவர்தான் முருகதாஸ் சார். அவர்கிட்ட 'கஜினி' வரை இருந்தேன். வெளியே வந்த பிறகு, நிறைய முயற்சிகள் பண்ணிட்டே இருந்தேன்! 
திடீர்னு ஃபாக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு சார் படம் தயாரிக்கப் போறதா செய்திகள். உடனே, ஓடிப் போய் சார்கிட்ட கதை சொன்னேன். 'இது உன் லைஃப் மட்டும் இல்லை. என் லைஃபும் கலந்திருக்கு. இந்தப் படம் ஜெயிச்சா, இன்னும் படம் எடுப்பேன். இல்லாட்டி போதும்னு தயாரிப்புக்கு மூட்டை கட்டிடுவேன்'னு சொன்னார். 'பக்'குனு இருந்துச்சு. தானா பொறுப்பு வந்தது.
டைரக்டர் ஆனதும் அம்மாவுக்கு போன் பண்ணி, டைரக்டர் ஆகிட்டேன்னு சொன்னேன். 'அந்த வேலைக்குத்தானே போனே... அதுல என்ன ஆச்சர்யம்'னு சாதாரணமா சொன்னாங்க. அம்மாவுக்கு அதுவும் ஒரு வேலைதான்.
'உன்னால முடியும்'னு நம்பிக்கை தந்தது, 'சொன்னதைவிட மேலே போயிருக்கே'னு மனசுவிட்டுப் பாராட்டினது, என்னை இந்த அளவுக்கு ஆளாக்கினது எல்லாம் முருகதாஸ் சார்தான். இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த ஒரே மகிழ்ச்சி, அவர் நம்பிக்கையை ஜெயிக்க வெச்சேன்கிறதுதான்.
'ரொம்ப சிம்பிள் படம். ஆனா, நிறைய 'செய்திகள் சொல்லுது'னு வரிசையா போன். அடுத்து, லிங்குசாமிக்காக ஆக்ஷன் படம் பண்றேன்.
புது நம்பர்ல இருந்து '..... சார் பேசணும்'னு போன். 'சார் யார்'னு புரியலை எனக்கு. 'நான் சூர்யா'னு சத்தமா சொல்லிட்டு, பின் சன்னமான குரலில் 'நேத்து பார்த்தேன். சூப்பர். அருமையான பிரசன்டேஷன். அதுதான் முக்கியம். அது உங்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு. இந்த வெற்றியும் முக்கியம்தான். ஆனா, அடுத்த படத்துக்கு இன்னும் கவனம் தேவை'னு பிரியமா சொல்லிட்டு வைக்கிறார்.
எல்லோரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். 'காதல் காட்சிகளில் நிறைய டீடெயில் இருக்கே... என்னப்பா... என்ன விசேஷம்'னு கேட்கிறாங்க. அப்படிலாம் எதுவும் இல்லைங்க. காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க. பேசுவாங்க. அப்படித்தான் நானும். வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. எப்படி வேணும்னு கேட்டாங்க. கொஞ்சம் நிறமா இருக்கணும். பாந்தமான அழகு, சிரிச்ச முகம். அம்மாவை அரவணைச்சுக்கணும். என்னைவிட உயரம் வேண்டாம்னு அடுக்கிட்டே போனேன். 'இப்படிலாம் வேணும்னு ஆர்டர் கொடுத்துச் செய்ய முடியாது. நீயே அப்படி ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் காதலிச்சுக்கோ'னு சொன்னாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நேரம் இல்லை சார். அப்பா, அம்மா பார்த்து வைக்கிற பொண்ணைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்!


Read More Add your Comment 0 comments


காதலுக்காக காத்திருக்கேன்! - அஞ்சலி




 Tamil Celebrity ACTRESS ANJALI HAPPY FOR ENGEYUM EPPOTHUM SUCCESS 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...' என்று எழுதிய கவிஞரை கண்டிக்கத் தோன்றுகிறது. 'உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...' என எழுதிய கவிஞரைக் கொண்டாடத் தோன்றுகிறது. எது எப்படியோ அஞ்சலி இப்போது இன்னும் அழகு.
ஜீவா தொடங்கி மு.களஞ்சியம் வரைக்கும் எல்லோருடனும் நடிக்க ஆரம்பித்து விட்டீர்களே என்ன காரணம்?
கரெக்ட். யாருமே கவனிக்கலையேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க வம்புக்கு வந்துட்டீங்க. சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்னு எந்தச் சட்டமும் கிடையாது. கிடைக்கற வாய்ப்பை எல்லோரும் பயன்படுத்ததான் நினைப்பாங்க. அதைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். சினிமா நடிகைன்னா எல்லா தளத்திலும் இயங்கணும். போதுமான அளவுக்கு என் கேரக்டர்களுக்கு பாராட்டுகள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. இனி அதை தாண்டணும். இந்தப் பொண்ணு என்னமா நடிக்குதுன்னு நாலு பேர் பேசிக்கிட்டே இருக்கணும். கல்யாணம் முடிச்சு எங்கேயாவது வாழும்போதும் என்னைப் பத்தி மீடியாக்கள் எழுதணும். இதுதான் என் ஆசை. இது அதிகப்படியாக இருந்தாலும் கவலை இல்லை. இதோ மு.களஞ்சியம் வரைக்கும் வந்துட்டேன்னு யாருக்கும் கவலை வேணாம்.
நான் வேண்டாம்னு ஒதுக்கிய படங்கள் நிறைய இருக்கு. பிடித்ததில் மட்டுமே நடிக்கிறேன். இவர் ஹீரோ, அவர் ஹீரோன்னு எந்த வித்தியாசமும் பார்க்கலை. கதை என்ன கேட்குதோ அதை தர தயாரா இருக்கேன். நல்ல கதை ஒண்ணு சொல்லி, நல்ல கேரக்டர் தந்தா உங்ககூட ஜோடியாக நடிக்கச் சொன்னாலும் எனக்கு இஷ்டம்தான். சினிமா ஒரு ஆர்ட். இங்கு எதை செய்தாலும் ரசிப்பாங்க.
'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு'ன்னு ஆச்சரியம் தந்துட்டு, இப்போ அது மாதிரி எதுவும் இல்லைன்னுதான் கவலைப்படுறோம்?
ஒ.கே. நான் பாயிண்டுக்கு வர்றேன். 'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு' இரண்டு படங்கள் மட்டும் எனக்கு போதுமா? அதே மாதிரி நடித்தால் இந்த கேள்வியை என்னங்க ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறீங்கன்னு மாத்தி கேட்பீங்க. எனக்கு எல்லாமும் வேணும்.
'கற்றது தமிழ்'ல நிஜமாத்தான் சொல்றீயான்னு பேசியதை இன்னைக்கும் பலர் ரசிக்கிறாங்க. என் கேரியரில் நிச்சயமாக அந்த சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு. அடுத்து 'அங்காடித் தெரு'. தமிழ் சினிமாவின் முக்கியமான படம். தொடர்ந்து அது மாதிரியே நடிச்சிருக்கலாம். மேக்-அப் இல்லாமல் அப்பாவித்தனமா வந்து போக நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா அதை மட்டும் வைத்து சினிமா கேரியரை நகர்த்த முடியாது.
இப்போ 'மகாராஜா'ன்னு ஒரு படம். ரிலீசுக்கு காத்திட்டு இருக்கு. இதுவரைக்கும் நீங்க பார்க்காத அஞ்சலி அதுல இருக்கா. அழகா கீரிம் ஹேர் வெச்சு, வித விதமா கலர் கலரா மார்டன் டிரெஸ் போட்டு, சாங்ஸ்ல மட்டும் கொஞ்சம் இடுப்பு காட்டி மாறியிருக்கேன். இது நான் விரும்பியதுதான். என்னை இந்த இந்த கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடுங்கன்னு விளம்பரம் கொடுத்து சினிமாவுக்கு வரலை. பிடிச்சு வந்தேன். பிடிச்சு நடிக்கிறேன். நீங்க கவலைப்படுற அளவுக்கு என்னிடம் தப்பான படங்களும் இல்லை.
'அங்காடித் தெரு' படத்துக்கு பெரிய அங்கீகாரத்தை நாங்களே எதிர்பார்த்தோம். தேசிய விருது பட்டியலில்கூட இல்லையே. வருத்தம்தானே?
'அங்காடித் தெரு'வை வெறும் படம்னு ஒதுக்கி வெச்சுட முடியாது. அதுல ஒரு லைஃப் இருந்துச்சு. எனக்கு பெரிய அனுபவம். எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு அது. வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி மகிழலாம். டி.வி.டி. வாங்க தேஞ்சு போற அளவுக்குப் போட்டு பார்க்கலாம். அதை அந்த சினிமா செய்யும். நானும் செய்வேன்.
வசந்தபாலன் சார், மகேஷ், கேமிராமேன் ரிச்சட் எம்.நாதன்ன்னு எல்லோருக்கும் பெரிய உழைப்பு இருக்கு. இப்படிப்பட்ட ஒரு உழைப்புக்கு பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைச்சிருக்கணும். கிடைக்கலைங்கறது பெரிய வருத்தம்தான். நிறைய பேர் இப்பவும் வருத்தப்பட்டு சொல்றாங்க. ஏன் விருது இல்லைன்னு எனக்கு தெரியலை. கிடைச்சிருந்தால் எல்லோருக்கும் நல்ல அடையாளம் வந்திருக்கும்.
'எங்கேயும் எப்போதும்' எப்படிப்பட்ட படம்?
இதுவும் ஒரு லைஃப். முழுக்க முழுக்கக் காதல். காதலில் ஜெயிக்கிறவங்க எப்போதும் குறைவுதான். ஆனால் ஜெயிக்கிறவங்க எல்லாம் எப்படியிருக்காங்கன்னு தெரியலை. இதுல ஜெயிக்கிறாங்க, தோற்குறாங்கன்னு எந்த செய்தியும் இருக்காது. எல்லாம் சரியான பின் ஒரு விஷயம் அந்த காதலர்களைப் புரட்டிப் போடுது.
அது என்ன? எப்படி? நல்ல நல்ல சீன்ஸ் வெச்சிருக்காங்க. புது கதை. இதுக்கு முன்னாடி 'காதல்'ன்னு ஒரு படம் எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்குப் பின் இந்தப் படம் நல்லாருக்கும். ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவாங்க.
கன்னடம், தெலுங்குன்னு வாய்ப்புகள் நிறைய வந்தும், தமிழில் மட்டுமே நடிப்பது ஏன்?
எல்லா சினிமாக்களிலும் வாய்ப்புகள் வந்துக்கிட்டுதான் இருக்கு. மலையாள பட வாய்ப்புகூட வந்தது. எனக்கு தமிழ் சினிமாதான் பிடிச்சிருக்கு. இங்கு எனக்குன்னு ஒரு பேர் இருக்கு. இவ நல்ல பொண்ணு, நல்லா நடிப்பான்னு எல்லோருக்கும் தெரியும். அதை கடைசி வரைக்கும் விட்டுடக் கூடாது. மற்ற சினிமாக்களில் போய் நடித்து விட்டு வந்து, இங்கேயும் நடிக்கலாம்.
அங்கே என் நடிப்பும், வாழ்க்கையும் மாறலாம். நான் அங்கு அப்படியெல்லாம் நடிக்கலைன்னு உங்கள்கிட்ட பொய் சொல்லலாம். இது எனக்கு வேண்டாம். கதையைகூட நான்தான் கேட்கிறேன். கதை கேட்க ஒரு ஆள். கால்ஷீட் கொடுக்க ஒரு ஆள்னு நான் வெச்சுக்கலை. அதனால்தான் எல்லோரும் ஈஸியா என்கிட்ட பேசுறாங்க. முக்கியமா தமிழ் தெரியுது. அதை விட கொஞ்சம் நடிக்கத் தெரியுது. மொழி தெரியாமல், கலாசாரம் தெரியாமல் எங்கும் போய் அவஸ்தைப் பட நான் தயார் இல்லப்பா.
அப்ப, மற்ற மொழி சினிமாக்களில் நடிக்கவே மாட்டீங்களா?
அதுக்கு இன்னும் தயார் ஆகலை. கன்னடத்தில் சில சினிமாக்களில் நடிச்சிருக்கேன். தெலுங்கிலும் சில சினிமாக்கள் பண்ணியிருக்கேன். இரண்டு மொழிகளின் கலாசாரமும் எனக்குத் தெரியும். அங்கு நான் வாழ்ந்திருக்கேன், படிச்சிருக்கேன். என் அப்பா, அம்மாவுக்கு அதுதான் சொந்த ஊர். சின்ன வயசில் கொஞ்சம் தமிழ்நாட்டுப் பக்கமும் வந்து போயிருக்கேன். அந்த விஷயம்தான் தமிழ் சினிமாக்களில் நடிக்கும் தைரியத்தை கொடுத்துச்சு. கலாசாரம், மொழி தெரியாத சினிமாக்களில் நான் நடிக்க மாட்டேன். இது என் அப்பா, அம்மாவுக்கும் பிடிக்கும். கன்னடம், தெலுங்கில் நல்ல சினிமாக்களில் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் நிறைய படங்கள் கையில் இருப்பதால், மற்ற மொழி சினிமாக்களை யோசிக்கலை.
உங்களைப் பற்றி கிசுகிசு பெரிசா வரலை. அப்ப என்ன பிளான் இருக்கு?
இல்லைங்க. காதல் திருமணத்தில் எனக்கு ஆசை இருக்கு. ஆனா அதுக்கு டைம் இல்லை. எனக்கு பிடிச்ச ஆள் எந்த துறையில் இருந்தாலும், காதலிப்பேன். அவரை பிடிச்சு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். இதில் எந்த தயக்கமும் இல்லை. அந்தக் காதலுக்காக காத்திருக்கேன். ஆனால் அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. கிடைக்க வேண்டிய ஒரு நேஷனல் அவார்டை மிஸ் பண்ணிட்டேன். அதை வாங்கியே ஆகணும்னு தோணுது. அதுக்கான படமும், கேரக்டரும் இப்போ என் கையில் இருக்கு. அதில் மட்டும்தான் இப்போ என் கவனமெல்லாம்.


Read More Add your Comment 0 comments


கிசுகிசுவால் நோ டென்ஷன் - அமலா பால்




 Tamil Celebrity AMALA PAUL SAYS THAT SHE IS NOT WORRIED ABOUT RUMORS
கேரள பைங்கிளி அமலா பாலை ஒரு இனிய வேளையில் சந்தித்து உரையாடியபோது....
'சிந்து சமவெளி' கதையின் மையப் பொருள் தெரிந்துதானே நடிக்க ஒப்புக் கொண்டீர்கள். பிறகு ஏன் அப்போது இயக்குநர் சாமியின் மீது புகார் தெரிவித்தீர்கள்?
இந்தக் கேள்விக்குப் பல தடவை பதில் சொல்லிருக்கேன். ஆனால் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஏன் கேட்கிறார்கள் என்று தெரியலை. சிலர் இந்த விஷயத்தைத் திரித்து எழுதி விட்டார்கள் என்பதில் எனக்கு வருத்தமும் இருக்கிறது. கதையின் மையப் பொருள் எனக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால் வசனங்களின் அர்த்தங்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
அப்போது எனக்குத் தமிழ் சரியாக பேசத் தெரியாது. சில வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொண்டு பேசுவேன். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைய வரும். எல்லாவற்றுக்குமே அர்த்தம் தெரியாமல் வாய் அசைக்க மட்டுமே செய்தேன். பின்னர் படத்தின் விளம்பரத்துக்காக சில விஷயங்கள் நடந்து விட்டது. ஆனால் இப்போது 'சிந்து சமவெளி' அனுபவங்களை மறக்க நினைக்கிறேன். எனவே மீடியாக்களும் மற்றவர்களும் 'சிந்து சமவெளி' பத்தி இனி பேச வேண்டாம்.
தொடர்ந்து கேரளத்துப் பெண்கள் தமிழ் சினிமா நடிகைகளாக மாறுவதால், தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
இதைப் பற்றி நான் எந்தக்கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயம்.. யார் வாய்ப்பையும் யாரும் தட்டிப் பறிக்க முடியாது. வெற்றி கிடைப்பவர்களுக்குக் கிடைத்தே தீரும்.
கேரளப் பெண்கள் அனைவருமே தமிழர்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்?
இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் என எல்லை பேதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டுக்கு பிடித்திருந்தது. இப்போதும் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று பாலிவுட் ரசிகர்களுக்கு ஆசை இருக்கிறது. மீனா, ரோஜான்னு தமிழ் நடிகைகள் கேரளத்தில் டாப் நடிகைகளாக இருந்த காலங்கள் உண்டு. தமிழர்களுக்குக் கேரளத்துப் பெண்களைப் பிடிக்கும் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அது ஏன் என்று உங்களுக்கும் தெரியும். அதை நீங்க சொன்னால்தான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கிடைக்கும்.
'மைனா' என்ற ஒரு படம் வரவில்லை என்றால், நீங்கள் எப்படி, எங்கே இருந்திருப்பீர்கள்?
எப்படி இருந்திருப்பேன்னு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சினிமாவில்தான் இருந்திருப்பேன்.
மென்சோகம் கலந்த வேடங்களில்தான் உங்களால் பளிச்சிட முடியும் என நினைக்கிறேன். கிளாமர் உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா? நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும்?
இதுவரைக்கும் அப்படிப் பார்த்ததால், அப்படியே உங்கள் மனதில் பதிந்து போயிருக்கேன். ஆனால், எனக்கு கிளாமர் வேடங்கள் நன்றாகவே பொருந்தும். நான்தான் அதிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கேன். கிளாமர் வேடங்களில் நடித்திருந்தால் இந்நேரம் பத்து படங்களைத் தாண்டியிருப்பேன். எனக்குத் தமிழ் கலாசாரம் பிடிக்கும். அதனால் இங்கு நடிக்க வந்தேன். தமிழ்நாட்டில் நல்ல சினிமாவை ஆதரிக்கும் ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இங்குதான் நல்ல சினிமாக்கள் நிறைய நாட்கள் ஓடுது. இப்படிப்பட்ட ரசிகர்களைத் திருப்பதிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் கிளாமர் வேடங்களை ஏற்கவில்லை. கிளாமர் எனக்குப் பொருந்தும் என நிரூபிக்க ஒரு படம் இருக்கிறது. அதை 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பார்த்துட்டுச் சொல்லுங்க.
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' எப்படிப்பட்ட படம்?
டீன் ஏஜ் லவ்தான். இது இளைஞர்களுக்கான படமா இருக்கும். முரளி சார் மகன் அதர்வா ஹீரோ. அவருக்கும் எனக்குமான லவ்தான் கதை. கொஞ்சம் வித்தியாசம், நிறைய சுவாரஸ்யம்னு கதை வந்திருக்கு. இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத அமலாபால் நிச்சயம் இதுல இருப்பாள். 'மைனா', 'தெய்வத்திருமகள்' எல்லோருக்கும் பிடித்தது. நிறைய பேருக்கு என்னைத் தெரிய வைத்தது. என்னைத் தெரியாமல் இருக்கும் சில பேருக்கு என்னை தெரிய வைக்கும் படமாக இந்தப் படம் இருக்கும்.
'மைனா'வுக்குப் பின் திடீரென விக்ரம் படம். எதிர்பார்க்காததுதானே?
எனக்கு சினிமா பற்றி நிறைய தெரியும். சின்ன வயசில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஒவ்வொரு படத்திலும் படிப்படியாதான் நமது எல்லையை எட்ட முடியும். அதற்கான தகுதிகளை தினம்தினம் வளர்த்துக்கிட்டே வந்தேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. காலேஜ் படிக்கும்போதுதான் எனக்கு சினிமா மீது ஆசை வந்தது.
தமிழ் சினிமா நிறைய பிடிக்கும். சின்ன சின்ன முயற்சிகளுக்குப் பிறகு இங்கு நடிக்க வந்தேன். சில வாய்ப்புகளும் கிடைத்தது. இருந்தும் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பிரபு சாலமன் சார்தான் முதல் வாய்ப்பு தந்தார். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். 'மைனா' ரிலீசாக கொஞ்சம் நாள்கள் ஆனது.
அந்த இடைவெளியில் 'சிந்து சமவெளி' முதலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும், அந்தப் படத்துக்கு பெரிசா நஷ்டம் இல்லைன்னு சொன்னாங்க.
'மைனா'தான் எனக்கான படம். நடிக்க ஸ்கோப் இருந்த கதை. அதனால் வாழ்க்கை மாறிப் போய்விட்டது. அதற்குப்பிறகுதான் விக்ரம் படம் தானாகவே வந்தது. நீங்க கேட்டது மாதிரி எதிர்பார்க்காத வாய்ப்பு அல்ல அது. எதிர்பார்த்தே வந்த வாய்ப்பு.
'மைனா'வுக்கு வந்த ரஜினியின் பாராட்டுகள் பற்றி..?
அது இனிமையான ஒரு சம்பவம். 'மைனா' ரிலீசுக்குப் அப்புறம் நிறைய வாழ்த்துகள் வந்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தேடி வந்து வாழ்த்திட்டுப் போனாங்க. சிலர் போனில் வாழ்த்து சொன்னாங்க. எல்லாமும் என்னை பரவசப்படுத்தி வைத்திருந்தது. ஒவ்வொரு கணமும் எனக்கு வந்த செல்போன் வாழ்த்து, சினிமாவின் மறுபக்கத்தைப் புரிய வைத்தது. அதுக்கு முன்னாடி வந்த 'சிந்து சமவெளியி'ன் விமர்சனங்களை ஒரே நாளில் அமலாபால் மறந்த நேரம் அது.
இரவு நேரம் சென்னையில் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு தெரியாமல் கதவைத் திறந்தேன். எதிரில் நின்ற ஆள் என் கையில் பூச்செண்டு கொடுத்து, "ரஜினி சார் கொடுக்கச் சொன்னார்.. 'மைனா'வுக்கு வாழ்த்து சொல்ல சொன்னார்'னு சொன்னதும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சினிமாவில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் வாழ்த்து அது. மறக்க முடியாத நேரம். ரஜினி சாருக்கு எப்போதும் நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன்.
முதல் படமே விவாதத்துக்கு உள்ளாகும் போதுதான் நாம் கவனிக்கப்படுவோம் என்ற நோக்கத்தில்தானே 'சிந்து சமவெளி'யில் நடித்தீர்கள்?
எப்படி வம்புக்கு இழுக்குறீங்க பாருங்க. எல்லோரையும் எல்லோரும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. இங்கு யாரும் தப்பிக்க முடியாது. படத்துக்கான விமர்சனங்களில் பாதி என்னைப் பற்றிதான். தியேட்டர் வாசலில் சில பெண்கள் இந்தப் படத்தைத் திரையிடக் கூடாதுன்னு போராடுறாங்கன்னு சொன்னார்கள். எனக்கு ரொம்ப வருத்தமா போயிருச்சு. தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிடிக்காத ஒரு படத்தில் நான் நடித்து விட்டேனோ என்று வருத்தப்பட்டேன். இருந்தும் அந்தப் படத்தால் என்னைக் கவனித்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க.
உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எவை?
ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. எப்படியாவது இந்த உலகம் முழுவதும் சுற்றிவிட வேண்டும் என்பது என் ஆசை. எல்லா கண்டங்களையும் பார்த்து ஒவ்வொரு நாட்டின் அழகிலும் நான் சொக்கிப் போக வேண்டும். இது நடக்குமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்!
நடிகைகள் பற்றி வரும் கிசுகிசுக்களில் காதல் பிரதானமாக இருக்கும். உங்களைப் பற்றி ஏதாவது கிசுகிசு வந்திருக்கா?
இந்த நடிகர், அந்த நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் இப்படி நீங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் தினமும் எழுந்திருக்கும்போது நினைக்கிறேன். அதுதான் என் ஆசை. ஆனால் நடிகைக்கு கிசுகிசு முக்கியம்தானே...? அதனால் கிசுகிசுவால் நோ டென்ஷன்.
திருமணம் எப்போது? காதல் திருமணம்தானே?
ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. இது நடிகைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட கேள்வியா? இப்பதான் நிறைய படங்கள் வந்துக்கிட்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நல்ல நடிகை என்று பேர் வாங்க வேண்டும். அதனால் இப்போதைக்கு இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.


Read More Add your Comment 0 comments


சரியான திட்டமிடலுக்கு பலன் கிடைச்சிருச்சு! - ஐஸ்வர்யா தனுஷ்




 Tamil Celebrity AISHWARYA DHANUSH SPEAKS ABOUT HIS '3' MOVIE இணையதளம் முழுக்கவே இதயம் வெடிக்க அலறி பாடிக் கொண்டிருக்கிறது தனுஷ் பாடிய பாடலை. ஐஸ்வர்யா இயக்கும் '3' படத்தில் வரும் 'வொய் திஸ் கொலை வெறிடி' என்ற பாடல்தான் இப்படி இளைஞர் பட்டாளத்தை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. "தத்து பித்துன்னு பாடுன பாட்டை தத்துவப் பாடல் மாதிரி எல்லாரும் கொண்டாடுறது கொஞ்சம் ஓவராதான் இருக்கு பாஸ்" என்று சிரிக்கிறார் தனுஷ். பக்கத்திலிருந்த ஐஸ்வர்யாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்படி தொடக்கமே ஜாலியான ஒரு சந்திப்பாக அமைந்து விட்டது. தொடர்ந்து பேசினார் ஐஸ்வர்யா.
நெட்ல ஹிட் ஆயிடுச்சுங்கறது நீங்களே கிளப்பிவிட்டது தானே..?
ப்ராமிஸ். இத நாங்களே எதிர்பார்க்கல. காரணம். நாங்க பாடலை நெட்ல போடவே இல்லை. பாட்டு முழுசா ஃபினிஷ் பண்ணாத நிலையிலேயே பாட்டை எடுத்து யாரோ நெட்ல விட்டிருக்காங்க. அதைக் கேட்டுட்டு நாமே முழுசா ரெக்கார்டிங் முடித்த பாட்டை நெட்ல போடலாமோன்னு ஐடியா பண்ணி போட்டோம். யாரோ தெரியாமல் செய்த விஷயம் எங்கள் பாடலை ஹிட் பண்ணிக் கொடுத்திருச்சு.
ஸ்ருதி - தனுஷ் கெமிஸ்ட்ரி எப்படி பொருந்தியிருக்கு?
தனுஷ் புது நடிகர் கிடையாது. ஸ்ருதிக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கு. அதோட ரெண்டு பேருக்கும் கதை ரொம்பவே பிடிச்சிருந்தது. ஸ்ருதி நடிப்புல இந்த படம் முக்கியமான படமா இருக்கும். தனுஷ் சின்னச் சின்ன ஆக்ஷன்ல அசத்தியிருக்கார்.
மழைப் பாடல் காட்சியில் தனுஷ் -ஸ்ருதி நெருக்கம் காட்டியிருக்காங்களே. ஷூட்டிங்கின்போது ஒரு மனைவியா இதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?
ரெண்டு பேரு தனியா இருந்தால் முத்தம் கொடுத்துக்கறது ஈஸி. சுற்றிலும் யூனிட்டே வேடிக்கை பார்க்குது. பக்கத்துலயே பொண்டாட்டி வேற உட்கார்ந்திருக்கேன். இந்த சூழல்ல தனுஷ், ஸ்ருதியோட காதல் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் பாருங்க. எனக்கு அதெல்லாம் எதுவும் தோணாது. சீன் நல்லா வரலன்னா மறுபடியும் கிஸ் பண்ணதான் சொல்லுவேன். நான் திருப்தியாகும் வரை விடமாட்டேன். தட்ஸ் ஆல்.
மியூசிக் டைரக்டர் அனிருத்திற்கு இந்த வருட ஹிட் கிடைச்சாச்சு போலிருக்கே?
படம் பண்ணும் போதே நாம ஒரு புது யூத் டீம் அமைக்கலாம்னு ப்ளான் பண்ணிதான் அனிருத்தை செலக்ட் பண்ணினேன். அது பலிச்சிடுச்சு. நானே மியூசிக் டைரக்டர்கிட்ட உட்கார்ந்து பாட்டு வாங்க நினைச்சேன். அப்படியே பண்ணினேன். சரியான திட்டமிடலுக்கு பலனா இப்பவே சக்ஸஸ் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
அமலா பால் நடிப்பை ஸ்ருதிகிட்ட வாங்கிட்டீங்களா?
இந்த கேரக்டருக்கு ஸ்ருதியை நினைச்சுதான் ஸ்கிரிப்ட்டே எழுதினேன். டேட் குழப்பங்கள்னால அமலாவை பண்ண வைக்கலாம்னு நினைச்சோம். ஸ்ருதி தேதியை அட்ஜஸ்ட் பண்ணி தந்ததால அவங்களே பண்ணட்டுமேனு ஆசைப்பட்டேன். எது யாருக்கு கிடைக்கணும்னு முடிவாகியிருக்கோ அதுதான் அவங்களுக்குக் கிடைக்கும். மற்றபடி அமலா நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது.
அப்பாவின் 'கோச்சடையான்' படத்தில் உங்க பங்களிப்பு இருக்குமோ?
நிச்சயமா இல்லை. என் படத்திற்கே எனக்கு நேரம் பத்தலை. ஓடிக்கிட்டே இருக்கேன்.


Read More Add your Comment 0 comments


என்னோட ஆசையெல்லாம் நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான்! - கார்த்திகா




 Tamil Celebrity TAMIL ACTRESS KARTHIKA SPEAKS ABOUT HIS ANNAKODIYUM KODIVEERANUM MOVIE 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' பூஜையில் அம்மா ராதாவோடு கார்த்திகா வந்தபோதே விசில் அந்த காட்டையே அதிர வைத்தது. அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில், சரளைக் கற்களிலும் கற்றாலைப் புதர் நடுவிலும் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் அன்னக் கொடியாகவே மாறிப்போயிருக்கிறார் கார்த்திகா. லேப்-டாப்பும் சாட்டிங்குமாக இருந்த கார்த்திகா கையில் தூக்குச் சட்டியையும் தொரட்டிக் கம்பையும் கொடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் விரட்டிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. சின்ன இடைவெளியில் கார்த்திகாவோடு பேசினோம்.
அன்னக்கொடி கேரக்டர் எப்படி?
அன்னக்கொடி ஆடு மேய்க்கும் பெண். அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். இந்த கேரக்டர் பற்றி பாரதிராஜா சார் பேசும்போது 'அன்னக்கொடி கேரக்டர் என் பல நாள் கனவு. நீ சரியா இருப்பேன்னு நினைக்கிறேன்'னு சொன்னார். அவர் சொன்ன அந்த நிமிஷத்திலிருந்து எனக்குள்ள அன்னக்கொடி ஆத்மா நுழைஞ்சிருச்சு. ஒரு பெண்ணோட குழந்தைப் பருவத்திலிருந்து வயதான பருவம் வரைக்கும் வாழ்க்கையைச் சொல்கிற கேரக்டர்.
பாரதிராஜாவை நீங்க முதன்முதலில் எப்போது சந்திச்சீங்க?
என்னோட சின்ன வயசிலயே பார்த்திருக்கேன். ஆனால், அதைவிட நான் ஒரு டான்ஸரா அவரை சந்திச்சதுதான் மறக்க முடியாதது. 'பொம்மலாட்டம்' ஷூட்டிங் சமயத்தில் எங்க மும்பை வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்காக நான் சிதம்பரத்துக்கு வர ரெடியாகிட்டிருந்தேன். அம்மா முதன் முதல்ல 'என் குருநாதர் முன்னால ஆடு'ன்னு சொன்னாங்க. அங்கேயே பரதம் ஆடினேன்.
இந்த கேரக்டருக்கு முதலில் ப்ரியாமணியைத் தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறதே?
அது அமீர் - இனியா நடிக்கும் கதாபாத்திரத்திற்காக. இனியாவுக்கு பதில் ப்ரியாமணியை பேசியிருந்தாங்க. அமீர் ஜோடியாக ப்ரியாமணி இருந்திருக்க வேண்டியதுனு யூனிட்ல பேசிக்கிட்டாங்க.
ஒரு மாடர்ன் பொண்ணு நீங்க. எப்படி ஆடு மேய்க்கவும் கிராமிய பழக்க வழக்கங்களுக்கும் உங்களை மாத்திக்கிட்டீங்க?
டைரக்டரோட எல்லா கிராமத்துப் படங்களையும் நான் டி.வி.டி.யில் போட்டுப் பார்த்தேன். அதுல பாடி லாங்குவேஜ் கத்துகிட்டேன். போட்டோ ஷூட்ல மேக்கப் இல்லாமல் வெறும் சட்டை பாவாடையுடன் ஆட்டுக்குட்டியை மேய்ச்சதைப் பார்த்து அம்மாவே அசந்துட்டாங்க. என்னோட ஆசையெல்லாம் மதுரைத் தமிழை, அதைப் பேசுற ஸ்டைலை எப்படியாவது கத்துக்கிட்டு என் கேரக்டருக்கு நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான். டைரக்டர் என்ன சொல்வாரோ தெரியல.
பட பூஜைக்கு ரொம்பவும் கிளாமரான காஸ்ட்யூம்ல வந்திருந்தீங்களே?
நான் கிராமத்துப் பொண்ணுங்கபோல புடவை கட்டிக்கிட்டு வரத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் டைரக்டர்தான், 'நீ கிளாமராவே வா. அப்பதான் இந்த அன்னக்கொடிக்காக நீ எப்படி மாறியிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்'னு சொன்னார். அதனால பூஜைக்கு நான் அப்படி வர வேண்டியதாயிடுச்சு.(சிரிக்கிறார்)
சரியா நடிக்கலேன்னா டைரக்டர் அடிப்பாருங்கிறது தெரியுமா?
கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், அம்மா என்கிட்ட 'டைரக்டர் நடிச்சுக் காண்பிக்கிறதுல பத்து சதவீதம் நடிச்சால் போதும் உன்னை விட்டுடுவார்'னு சொன்னாங்க. இப்பகூட ஷூட்ல ஹீரோ லட்சுமனோடு காதல் காட்சியில் எப்படி காதலோடு பாக்கணும்னு டைரக்டர் சொல்லித் தந்தார். எனக்கே வெட்கமா போயிடுச்சு. அவ்வளவு லவ்லியான ஆக்ஷன்.


Read More Add your Comment 0 comments


நான் நியூட்ரல் பொண்ணு! - நமிதா




 Tamil Celebrity I AM NEUTRAL GIRL SAYS NAMITHA நமிதா பேட்டிக்குக் காரணங்கள் எதுவும் வேண்டுமா என்ன? இப்போது இன்னும் கும்மென இருக்கிறார். ஆனால், இன்னும் அழகாக! 'என்ன மச்சான்... எப்புடி இருக்குது?' என்று நமிதா வரவேற்கும் அழகுக்கே இன்னும் சில நூறு பேட்டிகள் எடுக்கலாம்! 
கொஞ்ச நாள் மும்பைல இருந்தேன். அங்க பாலாஜினு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நான் ஆரம்பிச்சிருக்கு. ரியல் எஸ்டேட், இன்டீரியர் டிசைனிங்னு பிஸி பிஸி. இப்போ கம்பெனி நல்லா ரன் ஆகுது. சென்னை மிஸ் பண்ணுதுனு கிளம்பி வந்துட்டேன். இனி நீங்க நமிதாவை அடிக்கடி பார்க்கலாம்!
திடீர்னு வெயிட் போட்டுட்டீங்கபோல?
ஒரே வாரத்துல என்னால பதினஞ்சு கிலோ வெயிட் ஏத்தவும் குறைக்கவும் முடியும். அதுலாம் ஒரு மேட்டரே இல்லை மச்சான்!
நமிதா ஃபீவர் ஓவர்னு சொல்றாங்களே... அப்படியா?
அப்படியா என்ன? இப்பவும் ஃபங்ஷன்களில் என்னைப் பார்த்ததுமே மச்சான்ஸ் சந்தோஷப்படுது. சென்னையில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போனேன். லிஃப்ட்ல ஒரு மச்சான் பார்த்துட்டு, 'நான் நமிதாவை நேர்ல பார்த்துட்டேன்'னு ஜம்ப் பண்ணிட்டே இருந்தார். நான் அவரை கூல் பண்ணினேன். ஐ யம் ஹேப்பி அண்ட் ஐ யம் பேக்!
ஷூட்டிங் இல்லாத நாட்களில் அப்படி என்னதான் பண்ணுவீங்க?
நல்லா சாப்பிடுவேன். ஹாயா தூங்குவேன். யோகா பண்ணுவேன். டி.வி-யில் கார்ட்டூன், அனிமேஷன், கிரைம் த்ரில்லர் படங்கள் பார்ப்பேன்!
உங்களுக்குப் பிடிச்ச கிளாமர் ஹீரோயின்?
நான்தான். எனக்கு யாரும் ஆல்டர்னேட்டிவ் கிடையாது. 'தி டர்ட்டி பிக்சர்' படத்துல சில்க் கேரக்டருக்கு வித்யாபாலன் தப்பு சாய்ஸ்னு சொல்வேன். 'அந்த கேரக்டருக்கு நீதான் ஃபிட்'னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிச்சு. யோசிச்சா அதுதான் கரெக்ட். தமிழ்ல அந்தப் படத்தை யாராச்சும் எடுத்தா... நான் சூப்பர் கிளாமரா நடிப்பேன்!
உங்க சினிமா ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?
ஃப்ரெண்ட்ஸ்லாம் அதிகம் இல்லை. நான் ஜாஸ்தி பேச மாட்டேன். பரத், சினேகா, ரீமா சென்கிட்ட அப்பப்போ பேசுவேன். அப்புறம் குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. அவ்ளோதான்!
போன ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை அமைத்த படத்தில் நடிச்சிருக்கீங்க... இப்போ ஆட்சி மாறியிருச்சு. ஜெயலலிதா அரசாங்கம் பத்தி என்ன ஃபீல் பண்றீங்க?
நான் கலைஞர் சார் படத்துல தானே நடிச்சேன். கட்சியில் சேரலையே? இப்பவும் கலைஞர் படத்துல நடிப்பேன். அம்மா சார்பா படம் எடுத்தாலும் நடிப்பேன். நான் நியூட்ரல் பொண்ணு. தமிழ்நாட்டுக்கு அவங்க ரெண்டு பேரும் ரெண்டு கண் மாதிரி. எனக்கு ரெண்டு கண்களும் பிடிக்கும்!
விழாக்களுக்கு நடிகைகள் குட்டைப் பாவாடை அணிந்து வரக் கூடாதுனு சர்ச்சை ஆகியிருக்கே. ஆனா, குஷ்பு இதை எதிர்த்து இருக்காங்க. உங்க கருத்து என்ன?
மினி ஸ்கர்ட் எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. நான் ஷார்ட் டிரெஸ் போட்டாதான்... மச்சான்ஸ் ரசிக்குது. அதுதான் என் லேபிள். ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ்னு போனா ஜீன்ஸ், டி-ஷர்ட்தான் போட்டுப்பேன். ஆனா, ஃபேஷன் ஷோவுக்கு மினி ஸ்கர்ட்தான் ஃபிட்!
எப்போ கல்யாணம்?
இப்போ இல்லை. எனக்கு நல்ல கல்ச்சர் ஃபேமிலியில் இருந்துதான் மாப்பிள்ளை வேணும். பையன் கறுப்பா இருந்தாலும் நோ பிராப்ளம். ஆனா, தலையில் முடி நிறைய இருக்கணும். என்னைவிட பத்து வயசு ஜாஸ்தியோ கம்மியோ இருந்தாலும் ஓ.கே-தான். எனி ஒன் ரெடி ஃபார் தி கேம்?!


Read More Add your Comment 0 comments


நடிகைகளின் பரிதாபகரமான உண்மை வெளிச்சத்துக்கு வரும்! - புன்னகைப்பூ கீதா




 Tamil Celebrity PUNNAGAI POO GEETHA SPEAKS ABOUT ORU NADIGAIYIN VAKKUMOOLAM MOVIE 'புன்னகைப்பூ கீதா' கிட்ட யார் பேசினாலும் 'நீங்கள் ஹீரோயினா நடிக்கலாமே' என்று கேட்காமல், வர்றது ரொம்ப கஷ்டம். ஆனாலும் துணிச்சலோடு 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் தயாரிப்பாளராகியிருக்கிறார் கீதா. மலேசியாவில் இப்போதும் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டிப்போட்டு வைத்திடும் காந்த குரல், ஆர்.ஜே கீதாதான்.
மலேசியாவில் தொகுப்பாளினியாக இருந்தபோது நேயர்களோடு நடந்த மறக்க முடியாத அனுபவம் எது?
எஃப். எம். நேயர்களோடு பேசுறதே ஒரு தனி அனுபவம். அவ்வளவு ஃப்ரெண்ட்ஸ் எனக்கு இருக்காங்க. அதுல கடந்த ஆறு மாசமா ஒரு பொண்ணு என் கூட பேசிக்கிட்டிருந்தாங்க. இதுல எனக்கு ரொம்பவே ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க. அவங்கள பத்தி முழு விஷயம் எனக்குத் தெரியும். அவங்க காதலனை போன்லயே எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. சமீப நாட்களில் அவங்ககிட்டேயிருந்து போனே வரல. அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு பேசினாங்க. ஒரு கார் விபத்துல காதலன் இறந்து போயிட்டார். அந்தப் பெண்ணோட ரெண்டு காலும் உடைஞ்சு போயிடுச்சு. இதைக் கேட்டதும் நான் அப்படியே நொறுங்கிப் போயிட்டேன். லைவ்ல என்னால அழுகையை அடக்க முடியாமல் துடிச்சிட்டேன்.
சமூகம் நடிகையைப் பார்க்கும் பார்வையை எந்தளவுக்கு உங்கள் 'நடிகையின் வாக்குமூலம்' படம் மாற்றும்?
முழுமையாக மாற்றிவிடுமா என்பதை விட, திரைக்குப் பின்னாடி நடக்கும் ஒரு பரிதாபகரமான உண்மையை நாம வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும்போது அது நிச்சயமா சமூகத்தின் மனசாட்சியை உறுத்தும். நடிகையின் அழகான சிரிப்புக்குப் பின்னாடி எவ்வளவு அவஸ்தை இருக்கு என்பது தெரியும். எந்த நடிகை பார்த்தாலும் இது நம்ம வாழ்க்கையிலும் நடந்திருக்கேனு நினைப்பாங்க. இதற்கு எதிர்ப்பு வரும்னு சொன்னாங்க. ஆனா அப்படி எதுவும் வரல.
நடிகைகளுக்காக பரிதாபப் படுவதுபோல அவங்களை வியாபார ரீதியாக பயன்படுத்திக்கொள்வது மாதிரி இருக்கே?
நிச்சயமா அப்படிச் சொல்ல முடியாது. காரணம், இந்தப் படத்தை நான் லாபம் கிடைக்கும்னு நம்பி எடுக்கல. எதுவானாலும் பரவாயில்ல ஒரு பதிவா இது இருக்கட்டும்னுதான் நினைக்கிறேன்.
சரி... இப்படியே சினிமாவுக்குள்ளேயே இருந்தால் எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?
சீக்கிரமே சொல்றேன். அதுவும் கண்டிப்பா காதல் கல்யாணம்தான். அந்த அப்பாவியைப் பார்த்ததும் சொல்றேன், என்று அழகாக புன்னகைத்தார் கீதா.


Read More Add your Comment 0 comments


அப்பா மாதிரியே எனக்கும் காதல் திருமணம்தான்! - அதர்வா




 Tamil Celebrity ATHARVA SPEAKS ABOUT BALA'S ERIYUM THANAL MOVIE தலையை மறைத்துத் தொப்பி அணிந்திருக்கிறார் அதர்வா. 'யாருக்கும் தெரியக் கூடாது அதர்வா!' என்று இயக்குநர் பாலாவின் டோனிலேயே சொல்கிறார். "பாலா சார்கிட்ட கிட்டத்தட்ட தினமும் டியூஷன் படிக்கிறேன். சினிமாவில் ரொம்ப சீக்கிரமே எனக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு. அப்பா இப்ப இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவார்!" - குரல் கனிந்து இளகுகிறது அதர்வாவுக்கு.
'பாலா படம்னா நிறைய கஷ்டப்படணும். உண்டு இல்லைனு ஆக்கிடுவார்'னு சொல்வாங்களே?
அதுதானே அழகு! செம சீனியர் ஸ்டார்களில் இருந்து நடிக்கிற ஆசையோட நேத்து சென்னைக்கு வந்த ஆள் வரைக்கும் பாலா படத்தில் நடிக்க ஆசைப்படுவாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்காத வாய்ப்பு கிடைச்சதுக்காக, எவ்வளவும் கஷ்டப்படலாம். இன்னொரு விஷயம், இனிமே யாரும் தமிழ் சினிமாவில் கஷ்டப்படாமல் சும்மா நடிச்சிட்டுப் போக முடியாது. வழக்கமான ஃபார்முலா படங்களுக்கு ரசிகர்கள்கிட்ட மினிமம் வரவேற்புகூட இனிமே இருக்காதுனுதான் நினைக்கிறேன். உழைப்பைக் கொட்டாம இனிமே ஜெயிக்க முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும்!
நீங்க நடிச்சு ஒரு படம்தான் வந்திருக்கு. அதுக்குள்ள எப்படி பாலா பட வாய்ப்பு வந்தது?
அப்பாவுக்கும், அவருக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. அடிக்கடி சந்திப்பாங்க. அப்பா இல்லாதப்போ எனக்கு ஒரு லைஃப் கொடுக்கலாம்னு பாலா சார் நினைச்சிருக்கலாம். 'ஆபீஸூக்கு வா'னு ஒரு நாள் அழைப்பு. பறந்து போய் நின்னேன். 'என் அடுத்த படத்தில் நீதான் ஹீரோ'னு சொன்னார். அந்த சந்தோஷத்தைக்கூட உணரத் தோணலை. 'சரி சார்'னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். அப்புறம்தான் எனக்கு என்ன நடந்திருக்குனு புரிஞ்சது. அம்மாகிட்டதான் முதல்ல விஷயத்தைச் சொன்னேன். 'நல்ல விஷயம்டா... அப்பா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்'னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு! 
கங்கிராட்ஸ் அதர்வா... ஆங்... படத்தோட கதை என்ன?
பார்த்தீங்களா... சின்னப் பையன்தானே... ஒரு கங்கிராட்ஸ் சொல்லிட்டு கதையைக் கறந்துரலாம்னு நினைச்சீங்களா? பாலா சாருக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். 'யார் கேட்டாலும் கதை லைனைக்கூடச் சொல்லாத. அடிச்சுக் கேட்டாலும் சொல்லாத. முடிஞ்ச வரை வெளியேகூடப் போகாத'னு சொல்லி இருக்கார். இப்போதைக்கு கதை அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் ஸ்டார் மேக்கர். அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது!
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்துல அமலாகூட கெமிஸ்டரி அள்ளுதே...?
ரொம்ப வெட்கப்பட்டுக்கிட்டே நடிச்சேங்க. 'இது பத்தாது... இது பத்தாது'னு சொல்லிச் சொல்லி எக்கச்சக்கமா நடிச்சிட்டோம். அந்தக் காதல் கதைக்கு அதெல்லாம் தேவைப்பட்டது. அமலா ரொம்ப சின்சியர் கேர்ள்!
உங்க சீனியர்களில் யார் உங்களுக்கு ரோல் மாடல்?
எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க சூர்யாவும், தனுஷும். பெரிய இடத்துக்கு வந்துட்டோமேனு சூர்யா சார் ஈஸியா இருக்க மாட்டார். ஒவ்வொரு படமும் மாஸ்தான் அவருக்கு. தனுஷ் சார் இமேஜ் அது இதுனு எதையும் பார்க்க மாட்டார். பின்னி எடுத்துடுவார். நடிகன்னா அப்படி இருக்கணும். எல்லார்கிட்டயும் கத்துக்க எனக்குப் பாடம் இருந்தாலும், இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஃபேவரைட்ஸ்!
ரியல் லைஃப்ல இனிமேதான் காதலிக்கணும்னு சொல்லாதீங்க. 'காதல்' புகழ் முரளி பேரைக் காப்பாத்தணும் இல்லையா?
அப்பாவும் அம்மாவும் 14 வயசுல இருந்து காதலிச்சு வளர்ந்தவங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே அவங்களுக்கு இடையிலான காதலை உணர்ந்தே வளர்ந்தேன். அவ்வளவு ஈர்ப்போடு இருப்பாங்க. அப்பா மாதிரியே எனக்கும் காதல் திருமணம்தான். ஆனா, அதுக்கு இப்ப என்னங்க அவசரம்?


Read More Add your Comment 0 comments


வெட்கம், கூச்சமெல்லாம் எனக்கு சட்டுன்னு வராது! - வசுந்தரா




 Tamil Celebrity TAMIL ACTRESS VASUNDHARA SPEAKS ABOUT PORALI MOVIE டெல்லியில் பிறந்து வளர்ந்து, சென்னையில் வசிக்கும் வசுந்தரா தனது சிட்டி பயோடேட்டாவைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், வரிசையாக கிராமத்து கேரக்டர்களில் வெளுத்து வாங்குகிறார். 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் ஆடு திருடும் பேச்சி, 'போராளி'யில் ஆட்டுக்கிடை போடும் தமிழ்ச்செல்வி என வசீகரிக்கும் வசுந்தராவிடம் பேசினோம்.
கிராமத்துப் பொண்ணா நடிக்குறப்போ, நீங்க எதிர்கொண்ட முதல் பிரச்சினை என்ன?
சிட்டியிலேயே பிறந்து வளர்ந்ததால் எங்கேயும் தைரியமா போய் நிப்பேன். என்னோட பாடி லாங்வேஜ்ல பயமோ தயக்கமோ இருக்காது. பசங்களோட சரிசமமா பழகி வளர்ந்ததால் வெட்கம், கூச்சம் எல்லாம் எனக்கு சட்டுன்னு வராது. 'உங்க கையைப் பிடிச்சா, முகத்துல வெட்கத்தைக் காட்டுங்க'ன்னு சொன்னாலே எனக்குக் கஷ்டம். யாரும் கையைப் பிடிக்காட்டாகூட, எப்பவும் வெட்கத்தோட நடந்துக்கணும்னு சொன்னால், அது என்னால் முடிகிற காரியமா? 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்துல இந்த கிராமத்து நளினத்தை எங்கிட்ட கொண்டுவர்றதுக்குத்தான் டைரக்டர் சீனு ராமசாமியும் கஷ்டப்பட்டார். நானும் கஷ்டப்பட்டேன்.
உங்களுக்கு கிராமங்களில் கிடைச்ச அனுபவங்களைச் சொல்லுங்க...
'தென்மேற்குப் பருவக்காற்று', 'போராளி' ரெண்டு படங்களுக்கான ஷூட்டிங்கும் தேனியில்தான் நடந்துச்சு. அதுவும் ஒரே தெருவில்தான். ஏறக்குறைய ஒரு மாதம் அங்கே இருந்ததால், அந்த ஊர் மக்களுக்கு 'க்ளோஸ் ஃப்ரெண்ட்' மாதிரி ஆகிட்டேன். ரொம்ப உரிமையோட அவங்க வீட்டுக்குக் கூப்பிடுவாங்க. அவங்க கொடுக்குற காபி தனி ருசி. அங்கே திரியுற ஆடுமாடுகளை நான் ஆர்வமா போட்டோ எடுக்குறதைப் பார்த்து, 'இந்தப் பொண்ணு இதுல என்ன அதிசயத்தைக் கண்டுச்சு?'ன்னு மூக்குல விரலை வச்சு ஆச்சர்யப்படுவாங்க. 'ஒரு பொண்ணை அது இதுன்னு சொல்றாங்களே?'ன்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. பக்கத்து வீட்டுலருந்து ஒரு வீட்டுக்கு வர்றவங்க கதவைத் தட்டி தெரியப்படுத்தாம உரிமையோட உள்ளே நுழையறதையும், 'மதுரையில் வாக்கப்பட்ட உன் அண்ணன் பொண்ணு எப்படி இருக்கா?'ன்னு போகிற போக்கில் நலம் விசாரிக்குறதையும் பார்க்குறப்போ எனக்கு வியப்பா இருக்கும். 'அபார்ட்மெண்ட்டில் அடுத்த வீட்டுல இருக்குறவங்க பெயர்கூடத் தெரியாம இருக்கோமே'ங்கிறது எனக்கு அப்போதான் தோணுச்சு.
'போராளி'யில் ஆடு மேய்க்கிறீங்க, கன்னுக்குட்டியோட ஓடுறீங்க, மாட்டு வண்டி ஓட்டுறீங்க... ரொம்பவே கஷ்டப்பட்டுருப்பீங்க போல?
கன்னுக்குட்டியோட ஓடுற சீன்லதான் முழி பிதுங்கிடுச்சு. கேமராவைப் பார்த்தாலே கன்னுக்குட்டி தெறிச்சு ஓடிடும். ஏதாவது முள்ளுப்புதர்ல என்னைத் தள்ளிவிட்டுட்டு, அதுவும் சிக்கிக்கிடும். மாட்டு வண்டி சீனுக்காக ரெண்டு நாள் ப்ராக்டீஸ் செஞ்சேன். காளைகளில் ஒண்ணு பழசு. நாம சொல்ற பேச்சை கேட்கும். இன்னொண்ணு வண்டிக்குப் புதுசு. ஓட வேண்டிய நேரத்துல பிடிவாதமா நிக்கும். ஓடக்கூடாத நேரத்துல திமிறிக்கிட்டு ஓடும். என்னோட கறுப்பு கலர் சன் க்ளாஸைப் பார்த்தா, இன்னும் மிரளும். கண்ல பவர் பிரச்சினை உள்ள எனக்கு சன் க்ளாஸ் போடலைனா கண் ரொம்ப கூசும். அப்புறம் ப்ரவுன் கலர்ல சன் க்ளாஸ் போட்டு, அந்த மாட்டோட பயத்தைக் கொஞ்சம் குறைச்சேன்.
ஒரு சீனில் வண்டி ஒருபக்கமா சரிஞ்சிடுச்சு. வண்டிக்குள்ள சைலண்ட்டா பதுங்கியிருக்க வேண்டிய சசிகுமார், 'மாட்டுக்கயித்தை நான் பிடிச்சுக்கட்டுமா?'ன்னு கேட்டுட்டே நடிச்சு முடிச்சார். டைரக்டர் சமுத்திரக்கனியும் இதுபோல சீன்களில் என் வேலையை சுலபமாக்கிக் கொடுத்தார். 'சிட்டியில் பிறந்து வளர்ந்த நாம மாட்டு வண்டி ஓட்டிட்டோம்'ன்னு இப்போ பெருமையா இருக்கு.


Read More Add your Comment 0 comments


குடும்பத்துல குண்டு வெச்சிடாதீங்க! - விமல்




 Tamil Celebrity VIMAL SPEAKS ABOUT HIS LIP CHEMISTRY WITH NISHA AGARWAL IN ISHTAM MOVIE விமலுக்கும், நிஷா அகர்வாலுக்கும் 'இஷ்டம்' படத்தில் நடிக்கும்போது ஏதோ 'கசமுசா' என்ற தகவலை கோடம்பாக்கம் பட்சி நம் காதுக்குள் பரபரத்தது... சுவிட்சர்லாந்தில் நிஷாவோடு டூயட் பாடி விட்டுத் திரும்பிய விமலிடம் பேசினோம்.
சுவிஸ்ல நிஷாவோடு ஒரே கலாட்டாவாமே, நடுங்கிட்டாங்களாமே?

அதுவா... சுவிஸ்ல குளிர்காலத்துல குறிப்பிட்ட சில நாட்கள்ல அரசாங்கமே ஒரு மணி நேரம் தாமதமா இயங்க ஆரம்பித்திடுமாம். அதற்காக அங்குள்ள கடிகாரங்களையே ஒருமணி நேரம் லேட்டா ஓடறமாதிரி செட் பண்ணியிருக்காங்களாம். இது தெரியாமல் ஷூட்டிங்கிற்காக எங்க கடிகாரத்து நேரப்படி ஒரு மணி நேரம் முன்னதா வெளியில கிளிம்பிப் போயிட்டோம்... ரோட்ல யாருமே இல்லை. நிஷா அகர்வால் குளிர்ல நடுங்கிப் போயிட்டாங்க பாவம். அப்பதான் அங்க வந்த தபால்காரர் ஒருத்தர் இந்த விஷயத்தைச் சொல்லி எங்களை ஹோட்டலுக்குத் திருப்பி அனுப்பி வெச்சார்.
அதை கேட்கல பாஸ்.. நிஷாவோடு உங்களுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாமே..?
விடமாட்டீங்களா.. சரி சொல்லிடுறேன். இந்தப் படத்துல எனக்கும் நிஷாவுக்கும் லிப் டூ லிப் முத்தக் காட்சி இருக்கு. போதுமா? காட்சி நல்லா வரணும்ங்கிறதுக்காக பல தடவை முத்தம் வைக்க வேண்டியதா போச்சு. இதை யாரோ, 'இந்த முத்தம் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா'ன்னு தப்பா பரப்பிட்டாங்க. படத்துல நல்ல விஷயம் நிறைய இருக்கு சார். சார்லி சாப்ளின் கடைசிக் காலத்துல வாழ்ந்து இறந்து போன இடத்துலல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம்.
ஓ.கே.. அப்ப நிஷா அகர்வாலோடு உங்க நட்பு தொடரும் இல்லையா?
சார்... எனக்குக் கல்யாணம் ஆகி கொஞ்சநாள்தான் ஆகுது. குடும்பத்துல குண்டு வெச்சிடாதீங்க. 'இஷ்டம்' படத்தை வெச்சுக்கிட்டு இஷ்டத்துக்கு எழுதிடாதீங்க!


Read More Add your Comment 0 comments


முத்தக் காட்சியில் நடிக்கத் தயார்! - ரிச்சா கங்கோபாத்யாய்




 Tamil Celebrity RICHA GANGOPADHYAY HOT SAYS OK FOR LIP LOCK BUT NO BIKINI
ஒருவரோ இருவரோ அல்ல! தெலுங்கில் உருவான 'லீடர்' படத்துக்கு மொத்தம் 800 புதுமுகங்கள்! அவர்களில் இருந்து சலித்து எடுக்கப்பட்டவர்தான் இந்த ரிச்சா கங்கோபாத்யாய்! பிறந்தது டெல்லியில்.. அதன் பிறகு படித்தது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவின் நார்த்வில்லியில்.
"நான் பெங்காலி பிராமின் பெண். ஆனால் எனக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முக்கியமான தொடர்பு உண்டு. டெல்லியில் பிறந்தாலும் கோயமுத்தூரில் ஐந்து வயதுவரை வளர்ந்தேன். அதன்பிறகு அப்பா- அம்மாவுடன் அமெரிக்காவுக்கு பறந்து விட்டேன். அமெரிக்காவில் வளர்ந்தாலும் ஒரு இந்தியப்பெண்ணாகவே என்னை வளர்த்திருக்கிறார்கள். அதேநேரம் ஒரு அமெரிக்கப் பெண்ணின் தன்னம்பிக்கையையும், சுதந்திரத்தையும் எனக்கு ஊட்டியிருக்கிறார்கள்." என்று சொல்லும் ரிச்சாவின் நடிப்புத் திறமையை 'மயக்கம் என்ன' படத்தில் பார்த்து வியந்தவர்கள், 'ஒஸ்தி'யில் இவரது அழகைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
'மயக்கம் என்ன' படத்துக்குப் பிறகு அத்தனை சீக்கிரம் எந்த தமிழ்படத்தையும் ஒப்புக்கொள்ளாத ரிச்சா, "மொத்தக்கதையில் என் கதாபாத்திரம் மட்டும் நன்றாக இருந்தால் மட்டும் போதாது. எல்லா கதாபாத்திரங்களும் முழுமையாக இருக்க வேண்டும். அப்போதுதானே என் கதாபாத்திரமும் பேசப்படும். அதனால் தற்போதைக்கு எனக்கு தமிழில் வந்த கதைகள் எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை" என்று தனது அகலமான கண்களை உருட்டி அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் பேசினார் நம்மிடம்.
அவ்வப்போது 'டோண்ட் மிஸ்டேக் மி இஃப் ஐ புட் யூ அன் அக்ஷண்ட்' என்று வருந்தியபடியே அவர் தந்த பிரத்யேக பேட்டி இது!
சினிமாவுக்காகவே உங்களது பெற்றோர் உங்களை வளர்த்தார்களா?
இல்லை இல்லை! அப்படி எந்த திட்டமிடலும் இல்லை. ஆனால் நான் ஒரு வாத்திய இசைக்கலைஞராக இன்னோரு பக்கத்தில் புகழ்பெற வேண்டும் என்று அப்பா விரும்பினார்.
இதனால் என்னை அப்பா அந்த்ரா என்ற செல்லபெயரில்தான் கூப்பிடுவார். அந்த்ரா என்ற பெங்காலிச் சொல்லுக்கு பல்லவி என்று அர்த்தம். என்னை சிறு வயதிலேயே வாய்ப்பாட்டும் வயலினும் கற்றுக்கொள்ள வைத்தார்கள். கலைத்துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு வயலின் ஏற்படுத்தியது என்று சொல்லலாம்!
ஆனால் 2007-ல் அமெரிக்காவில் நடந்த இந்திய அழகிப் போட்டியில் வென்றதுதான் என்னோட எனக்கு டர்னிங் பாயின்ட். இந்த டைட்டிலை வென்ற பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வரிசையாக வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக வாடிகா ஹேர் ஆயில், பீட்டர் இங்லாண்ட் விளம்பரங்களைப் பார்த்தே தெலுங்குப் படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு வந்தது.
டோலிவுட்டின் முக்கியமான சினிமா தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து அறிமுகமான ராணா டக்குபாயுடன் 'லீடர்' படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு என்னை தென்னிந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது.
இந்தப் படத்துகாக 800 புதுமுகங்களுக்கு ஆடிஷன் செய்து இறுதியில் நான் தேர்வானதை பெருமையாக நினைக்கிறேன். அதன்பிறகு 'மிரபகே'. மூன்றாவதாக பி.வாசு சாரின் 'நாகவள்ளி' என்று தெலுங்கில் பிஸியானபோதுதான் 'மயக்கம் என்ன' படத்துக்கு செல்வராகவன் அழைத்தார். "நான் இயக்கும் தெலுங்குப் படத்தில், ராணாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க முடியுமா என்று கேட்டார் செல்வராகவன். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் டிராப்பாகி விட்டது. அந்தப் படத்துக்கான கால்ஷீட்டைதான் 'மயக்கம் என்ன' படத்திற்கு கொடுத்தேன்.
உண்மையில் கமல் தற்போது இயக்கி வரும் 'விஸ்வரூபம்' படத்துக்குத்தான் நீங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டீர்கள் என்று செய்திகள் வெளியானதே?
'விஸ்வரூப'த்தில் எனது கேரக்டர் என்ன என்பதை செல்வராகவன் சொன்னார். அவர்தான் என்னை கமல் சாரிடம் அறிமுகப்படுத்தவும் செய்தார். கமலுடன் நடிப்பதை எப்போதுமே லைப் டைம் ஆஃபராக நினைப்பேன்.
ஆனால் 'விஸ்வரூபம்' கேரக்டரில் நடித்தால் எனது சினிமா கேரியர் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று உள்மனம் சொன்னது. அதனால் நேர்மையாக எனது எண்ணத்தை சொல்லி விட்டேன். இது தொடக்க கட்டத்திலேயே நடந்தது. இதில் மறைக்க எதுவுமில்லை!
'மயக்கம் என்ன', 'ஒஸ்தி' ஆகிய இரண்டு படங்களிலும் இவ்வளவு திறமையான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறீர்களே! இத்தனை நடிப்புத்திறன் எப்படி?
கல்லூரியில் மூன்றாண்டுகள் தொடர்ந்து இங்லீஷ் தியேட்டரில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
அதன்பிறகு அமெரிக்காவில் இருந்து வாய்ப்புகள் தேடி மும்பை வந்ததும், பாலிவுட்டின் அற்புதமான நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர் நடத்தி வரும் 'ஆக்டர்ஸ் பிரிபேர்' நடிப்புப் பயிற்சியில் பங்குபெற்றேன். அது நல்ல அனுபவமாக அமைந்தது. ஆனால் இந்த பயிற்சியை விட, தற்போது நான் அதிகம் நம்புவது, நடிப்பை நம்மிடமிருந்து வெளியே எடுக்கும் இயக்குநர்களின் திறமையை! செல்வராகவன் ஒரு காட்சிக்குகூட நடித்துக் காட்டவில்லை.
காட்சியின் மூடை உருவாக்கி, நம்மிடமிருந்து நடிப்பை எடுத்து விடுவதில் திறமையான இயக்குநர். 'மயக்கம் என்ன' படத்தில் எனக்கு கிடைத்திருக்கும் எல்லா பாராட்டுகளுக்கும் செல்வராகவன்தான் காரணம். அதேபோல 'ஒஸ்தி' ஒரு கமர்ஷியல் படம் என்பதால் அதில் அழகாக என்னை காட்டிக்கொள்வதில் ஈடுபாடு காட்டினேன். அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ்!
குஷ்பூ, மீனா, சிம்ரன் வரிசையில் ரிச்சாவுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கிறது. தமிழ் சினிமாவால் அவரைத் தவிர்க்க முடியாது என்று செல்வராகவன் உங்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தார். ஆனால் 'மயக்கம் என்ன' படத்துக்குப் பிறகு உங்களுக்கு வாய்ப்புகள் வந்ததாக தெரியவில்லையே?
வாய்ப்புகள் வரவில்லை என்று யார் சொன்னது?! இதுவரை சுமார் 25 கதைகள் கேட்டிருக்கிறேன். எல்லாமே என்னை கிளாமர் ஹீரோயினாக டைப் காஸ்ட் செய்யத் துடிப்பவை. அதனால் தவிர்த்து விட்டேன். என்றாலும் கிளாமரோடு எனது நடிப்புத் திறமைக்கும் தீனி போடும் இரண்டு வாய்ப்புகளை தமிழில் தேர்வு செய்திருக்கிறேன். அவை இரண்டுமே இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படலாம்.
அதற்கு முன்பு தற்போது என தாய் மொழியான பெங்காலியில் ஒரு படம் ஒப்புகொண்டிருக்கிறேன். இது 'விக்ரமார்குடு' தெலுங்குப் படத்தின் பெங்காலி ரீமேக். இது தவிர 'வராதி' என்ற தெலுங்குப் படத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும். இதில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களும் முடியவே ஆகஸ்ட் ஆகிவிடும்.
கிளாமர் கதாபாத்திரங்கள்தான் உங்களுக்கு பொருந்தும் என்று நினைக்கிறீர்களா? 
நிச்சயமாக இல்லை. எனக்கு நீச்சல் உடையோ பிகினியோ சரியாக வராது. ஆனால் இன்று இந்திய சினிமாவில் முத்தக் காட்சிகள் சர்வசாதாரணமாகிவிட்டன. கதைக்கு மிக மிக அவசியம் என்றால் முத்தக் காட்சியில் நடிக்கத் தயார். ஆனால் பிகினிக்கு நோ!
சுசி.கணேசன் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கும் 'திருட்டுப் பயலே' இந்திப் படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினீர்களாமே?
தவறு என்னுடையது அல்ல. படத்தை சப்டைட்டிலுடன் எனக்கு சிடி போட்டுக் காட்டினார் இயக்குநர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தெலுங்கில் தற்போது நடித்து வரும் 'வராதி' படத்துக்கு கொடுத்த தேதிகள், அவர்கள் கேட்கும் காஷீட்டுடன் கிளாஷ் ஆகிறது. ஆனால் தெலுங்குப் படத்தை முடித்து விட்டு வரும் வரை காத்திருக்க முடியாது என்றார்கள். கால்ஷீட் பிரச்சினை மட்டும் வந்துவிடகூடாது என்று நினைப்பவள் நான். அவர்கள் வேண்டாம். என்று சொன்ன பிறகே பெங்காலிப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். என் மீது எந்தத் தவறும் இல்லை.
மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்கும் திட்டமிருக்கிறதா?
தெரிந்துதான் கேட்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. 2013-ல் மீண்டும் செல்வா படத்தில் நடிக்கும் திட்டமிருக்கிறது. அவர் சொன்ன கதை என் கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது. தமிழின் மிக பிரம்மாண்டமான ஃபேண்டஸிப் படமாக அது இருக்கும்!
நன்றி: 4தமிழ்மீடியா


Read More Add your Comment 0 comments


 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King