அப்பா மாதிரியே எனக்கும் காதல் திருமணம்தான்! - அதர்வா

'பாலா படம்னா நிறைய கஷ்டப்படணும். உண்டு இல்லைனு ஆக்கிடுவார்'னு சொல்வாங்களே?
அதுதானே அழகு! செம சீனியர் ஸ்டார்களில் இருந்து நடிக்கிற ஆசையோட நேத்து சென்னைக்கு வந்த ஆள் வரைக்கும் பாலா படத்தில் நடிக்க ஆசைப்படுவாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்காத வாய்ப்பு கிடைச்சதுக்காக, எவ்வளவும் கஷ்டப்படலாம். இன்னொரு விஷயம், இனிமே யாரும் தமிழ் சினிமாவில் கஷ்டப்படாமல் சும்மா நடிச்சிட்டுப் போக முடியாது. வழக்கமான ஃபார்முலா படங்களுக்கு ரசிகர்கள்கிட்ட மினிமம் வரவேற்புகூட இனிமே இருக்காதுனுதான் நினைக்கிறேன். உழைப்பைக் கொட்டாம இனிமே ஜெயிக்க முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும்!
நீங்க நடிச்சு ஒரு படம்தான் வந்திருக்கு. அதுக்குள்ள எப்படி பாலா பட வாய்ப்பு வந்தது?
அப்பாவுக்கும், அவருக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. அடிக்கடி சந்திப்பாங்க. அப்பா இல்லாதப்போ எனக்கு ஒரு லைஃப் கொடுக்கலாம்னு பாலா சார் நினைச்சிருக்கலாம். 'ஆபீஸூக்கு வா'னு ஒரு நாள் அழைப்பு. பறந்து போய் நின்னேன். 'என் அடுத்த படத்தில் நீதான் ஹீரோ'னு சொன்னார். அந்த சந்தோஷத்தைக்கூட உணரத் தோணலை. 'சரி சார்'னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். அப்புறம்தான் எனக்கு என்ன நடந்திருக்குனு புரிஞ்சது. அம்மாகிட்டதான் முதல்ல விஷயத்தைச் சொன்னேன். 'நல்ல விஷயம்டா... அப்பா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்'னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!
கங்கிராட்ஸ் அதர்வா... ஆங்... படத்தோட கதை என்ன?
பார்த்தீங்களா... சின்னப் பையன்தானே... ஒரு கங்கிராட்ஸ் சொல்லிட்டு கதையைக் கறந்துரலாம்னு நினைச்சீங்களா? பாலா சாருக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். 'யார் கேட்டாலும் கதை லைனைக்கூடச் சொல்லாத. அடிச்சுக் கேட்டாலும் சொல்லாத. முடிஞ்ச வரை வெளியேகூடப் போகாத'னு சொல்லி இருக்கார். இப்போதைக்கு கதை அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் ஸ்டார் மேக்கர். அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது!
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்துல அமலாகூட கெமிஸ்டரி அள்ளுதே...?
ரொம்ப வெட்கப்பட்டுக்கிட்டே நடிச்சேங்க. 'இது பத்தாது... இது பத்தாது'னு சொல்லிச் சொல்லி எக்கச்சக்கமா நடிச்சிட்டோம். அந்தக் காதல் கதைக்கு அதெல்லாம் தேவைப்பட்டது. அமலா ரொம்ப சின்சியர் கேர்ள்!
உங்க சீனியர்களில் யார் உங்களுக்கு ரோல் மாடல்?
எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க சூர்யாவும், தனுஷும். பெரிய இடத்துக்கு வந்துட்டோமேனு சூர்யா சார் ஈஸியா இருக்க மாட்டார். ஒவ்வொரு படமும் மாஸ்தான் அவருக்கு. தனுஷ் சார் இமேஜ் அது இதுனு எதையும் பார்க்க மாட்டார். பின்னி எடுத்துடுவார். நடிகன்னா அப்படி இருக்கணும். எல்லார்கிட்டயும் கத்துக்க எனக்குப் பாடம் இருந்தாலும், இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஃபேவரைட்ஸ்!
ரியல் லைஃப்ல இனிமேதான் காதலிக்கணும்னு சொல்லாதீங்க. 'காதல்' புகழ் முரளி பேரைக் காப்பாத்தணும் இல்லையா?
அப்பாவும் அம்மாவும் 14 வயசுல இருந்து காதலிச்சு வளர்ந்தவங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே அவங்களுக்கு இடையிலான காதலை உணர்ந்தே வளர்ந்தேன். அவ்வளவு ஈர்ப்போடு இருப்பாங்க. அப்பா மாதிரியே எனக்கும் காதல் திருமணம்தான். ஆனா, அதுக்கு இப்ப என்னங்க அவசரம்?

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "அப்பா மாதிரியே எனக்கும் காதல் திருமணம்தான்! - அதர்வா"
Post a Comment