'துப்பாக்கி'ல வேற ஒரு விஜய்யை பார்க்கலாம்! - விஜய்

ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?
முதல்ல எனக்கு லேசான தயக்கம் இருந்தது. ஷூட்டிங் ஆரம்பிச்சதுமே அது மாறிடுச்சு. காரணம், ஷங்கர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல அதையும் தாண்டி பிர்லியண்டானவர். உலகத்துல எது நடந்தாலும் அதைத் தெரிஞ்சு வைச்சுக்குறார். அது சினிமாவுக்குத் தொடர்பில்லாத விஷயமானாலும்கூட தெரிஞ்சுக்க விரும்புறவர். செட்ல அவர் வேலை செய்யற விதமே தனி. பல தடவை நான் பார்த்து பிரமிச்சிருக்கேன் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பீல் பெர்க்குனே சொல்லலாம். அந்தளவுக்கு உழைக்கிறார். இது மறுக்க முடியாத உண்மை. நம் தமிழ் இயக்குநர் இந்தளவுக்கு உயரே வந்திருப்பது பெருமைதான்.
அடுத்து இதே போல் வேறு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
இந்தக் கதை ஏற்கெனவே படமாகி இருந்ததால் தமிழில் நடிக்க எந்தத் தயக்கமும் எனக்கு இருக்கவில்லை. அதே சமயம் என் ரசிகர்களையும் இந்தப் படம் திருப்திப்படுத்தும். இனி அடுத்தடுத்து என் ரசிகர்களை குஷிப்படுத்தும் படங்களில் கவனம் செலுத்துவேன். அழுத்தமான கதை அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் நடிப்பது பற்றி யோசிப்பேன். இது ஆரோக்கியமான விஷயம்தானே. 'வேலாயுதம்' படம் எடுக்கும்போது 'ஜெயம்' ரவி என் காட்சிகளை எப்படியெல்லாம் பில்ட்-அப் பண்ணலாம் என்று சொல்லியிருக்கார். அவரும் ஒரு ஹீரோதான். ஆனால், இன்னொரு ஹீரோவுக்கு காட்சி நல்லா வரணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்.
நண்பனில் அமீர்கானைத் தாண்டி விட்டதாக நினைக்கிறீங்களா?
அவர் நடிப்பைத் தாண்டி பண்ணிட்டதா நினைக்கல. காரணம், அவர் வேற ஒரு இடத்துல இருக்கார். அவரோட சேர்த்து பேசுறது நல்லதா படல. என் ஸ்டைல்ல நடிப்பை வெளிக்கொண்டு வந்துருக்கேன். நிச்சயம் ஹிந்திப் படம் பார்த்தவங்களே இந்தப் படத்தை புதுப் படம் மாதிரி நினைச்சுப் பார்ப்பாங்க.
ஷங்கரோடு மீண்டும் இணையும் திட்டம் இருக்கா?
ஏன், சேர்ந்து பண்ணினால் என்ன.. நல்ல கதை அமைந்தால் போதும். இப்ப இல்லை 'முதல்வன்' படத்திலேயே கேட்டார். என்னால நடிக்க முடியாமல் போயிடுச்சு. அதற்கே ரொம்ப வருத்தப்பட்டேன். அதனாலதான் 'நண்பன்' படத்துலயும் அப்படி ஆகிடக் கூடாதுன்னு உடனே நடிச்சேன்.
'துப்பாக்கி' எப்படி இருக்கும்..?
கண்டிப்பா இது வேற ஒரு விஜய்யை உங்களுக்குக் காட்டும். அதோட என் ரசிகர்களுக்கு பெரிய விருந்தா இருக்கும். துப்பாக்கியில் நான்தான் புல்லட்! இப்போதைக்கு இது போதும், என்று முடித்தார் விஜய்!.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "'துப்பாக்கி'ல வேற ஒரு விஜய்யை பார்க்கலாம்! - விஜய்"
Post a Comment