கிளாமரையும் விட்டு வைக்க மாட்டேன்! - மதுஷாலினி

பாலா பட ஹீரோயினுக்கு இங்கே நல்ல இடம் இருக்கும். ஆனால் நீங்களும் ஜனனி அய்யரும் ஆளையே காணுமே?
பாலா படத்துல நடிச்சா நல்ல இடம் கொடுப்பாங்கன்னு நீங்க சொல்றது உண்மைதான். அதன் படியே நிறைய படங்கள் எனக்கும் வந்தது. 'அவன் - இவன்' படத்தைப் போல அப்பாவி கேரக்டர் நிறைய..... நான்தான் மறுத்து விட்டேன். நல்ல படம் கொடுங்கன்னு யார்க்கிட்டேயும் கேட்க முடியாது.
'அவன் - இவன்' எனக்கு நல்ல விசிட்டிங் கார்டு. அதை வெச்சுக்கிட்டு நான் சும்மா வந்து போகிற படத்துல நடிச்சு, இருக்குற பெயரைக் கெடுத்துக்க முடியாது. அப்படி நடிக்கவும் தேவையில்லை. நான் எலக்ட்ரானிக் இன்ஜீனியரிங் படிச்ச பொண்ணு. இப்பவும் வேலைக்கு நிறைய ஆஃபர் இருக்கு. ஆனா சினிமாதான் முக்கியம்ன்னு வந்துட்டேன்.
சினிமா ஆசையைச் சொன்னதும் வீட்டுல முதலில் பயந்தாங்க. அப்புறம் ஏத்துக்கிட்டாங்க. நீங்க சொல்லுகிற மாதிரி தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும். அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன். 'அவன் - இவன்' படத்தில் என்கூட நடித்த ஜனனி அய்யரிடம் பேசினேன். அவங்களும் இப்ப ஒரு நல்ல படத்துல நடிக்கிறதா சொன்னாங்க.
சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ, திடீர்ன்னு பெரிய டைரக்டர்னு வித்தியாசம் இல்லாமல் நடிக்கிறீங்களே?
கதை, அதில் என் கேரக்டர் என்னன்னு மட்டும்தான் பார்ப்பேன். ஹீரோ யார்ன்னு கூடப் பார்க்க மாட்டேன். ஹீரோ பற்றி விசாரித்து நடிக்கிறது நல்ல நடிகைக்கு அழகல்ல. மதுஷாலினிதான் இப்படி வெரைட்டியா நடிப்பாங்கன்னு சொல்றதைக் கேட்கணும்ன்னு பெருமையா இருக்கு. நீங்க கேட்டதில் சந்தோஷம். நல்லா அறிமுகமான ஹீரோவுடன் ஒரு படம். அடுத்து என் கேரக்டருக்காக ஒரு படம், திரும்பியும் இன்னொரு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் போதுதான் என் கிராஃப் எப்படியிருக்குன்னு எனக்கே தெரியும். பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர் படங்களில் மட்டும்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கக் கூடாது. அது ஒரு இடத்தில் நிற்க வைத்து விடும். நல்ல படம் வந்தால் கிளாமரையும் நான் விட்டு வைக்க மாட்டேன்.
அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால்னு நிறைய பேர் கிளாமர் வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவதேயில்லை.. அதனால்தான் நீங்களும் கிளாமருக்கு ஓ.கே. சொல்றீங்களா?
நீங்க சொல்ற அதே அனுஷ்காதான் 'அருந்ததி', 'வானம்' படங்களில் கேரக்டர் ரோல் பண்ணினாங்க. சினிமா நடிகை கிளாமருக்கு ஆசைப்படுவது சகஜம்தான். ஆனால் யாரும் எல்லை மீறலை. ஏன் த்ரிஷாவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' பண்ணினாங்க. வெறும் கேரக்டர் ரோலா பண்ணிக்கிட்டு இருக்குற அஞ்சலிகூட இப்ப ஒரு படத்துல கிளாமரா டான்ஸ் ஆடியிருக்காங்களாமே? எல்லோருக்கும் கிளாமர் ஆசை இருக்கும். அது எனக்கும் இருக்கு. இப்பவும் என் சாய்ஸிஸ் கேரக்டர் ரோல், கிளாமர் இரண்டுக்கும் இடம் உண்டு.
உங்களுடைய சக நடிகைகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க. யார்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?
ஏன்னா எனக்கு யார்க்கிட்டேயும் சண்டை கிடையாது. ரிலாக்ஸா அரட்டை அடிச்சு பேசிக்க யாருக்குமே டைம் இல்லை என்பதுதான் உண்மை. எப்போதாவது விழாக்களில் பார்க்கும் போது ஹாய் சொல்லிப்போம். படம் பார்த்தா நிறை, குறைகளைக் சொல்லிப் பேசுவாங்க.
ஜனனி அய்யர் எனக்கு நல்ல ப்ரெண்ட். ஆனா இப்ப எஸ்.எம்.எஸிஸ் மட்டும்தான் பேசிக்குறோம். பூனம் பஜ்வா, அமலா பால், சமீரா ரெட்டி, சமந்தானு பெரிய லிஸ்ட் இருக்கு. எல்லோரும் செம சேட்டைக்காரிங்க. எப்போதாவது மீட் பண்ணுனா, பார்ட்டி, பீச்ன்னு ஆட்டம் போடுவோம். ஆனா வீட்டுக்கு வந்துட்டா நான் மட்டும் குட் கேர்ள்.
மதுஷாலினியின் காதல்கள்...?
என்னங்க இது காதல்கள்னு சொல்றீங்க. நான் என்ன பத்து பதினைந்து பேரையா லவ் பண்றேன். மீடியா ஆட்கள் ரொம்ப மோசம்ப்பா. எப்பவும் இந்த கேள்வியை மிஸ் பண்ணவே மாட்றாங்க. எப்பவும் இதைத்தான் கேட்கிறாங்க.
அதனால் வழக்கம் போல் நான் சொல்லும் பதிலையே சொல்லி விடுகிறேன். நோட் பண்ணிக்கோங்க.... காதலிக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் வயசாகலைப்பா. நான் ரொம்ப சின்ன பொண்ணு புரியுதா? உடனே என்ன வயசுன்னு அடுத்த கேள்வி கேட்காதீங்க. அதுக்கு நீங்க வேற ஆளத்தான் பார்க்கணும்.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "கிளாமரையும் விட்டு வைக்க மாட்டேன்! - மதுஷாலினி"
Post a Comment