கவர்ச்சி வேடத்தில் எனக்கு விருப்பமில்லை. இயக்குநர்கள்தான் அப்படி நடிக்க வைத்தார்கள் என்றார் ஸ்ரேயா. இது பற்றி அவர் கூறியதாவது: ஸ்ரேயா என்றதும் கவர்ச்சியான இமேஜ்தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக்குநர்கள்தான் என்னை அதுபோல் நடிக்க வைத்தனர். விருது பெறும் நடிப்பை வெளிப்படுத்தும் வேடம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம். இனிமேல் அதுபோன்ற வேடங்கள் வரும் என்று நம்புகிறேன். அஜித், சூர்யாவுடன் இதுவரை நடிக்கவில்லை. அவர்களுடன் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். நடிப்பை விட்டு விலகுவதற்கான எண்ணம் எனக்கு இல்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் 'லைஃப் ஈஸ் பியூட்டிபுல்', மற்றும் தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ரன்' படங்கள் வெளிவரவுள்ளன. இயக்குநர்கள் மேல குற்றச்சாட்டு வக்கிறீங்களே ஒங்களுக்கு எங்க போச்சு? ம்ஹும்.. மெழுகுவர்த்தி மண்விளக்குக்கு ஆசப்பட்டுச்சாம்!
Share your views...
0 Respones to "கவர்ச்சியான இமேஜுக்கு இயக்குநர்கள்தான் காரணம்: ஸ்ரேயா அதிரடி! (I need to keep doing good work: Shriya Saran )"
Share your views...
0 Respones to "கவர்ச்சியான இமேஜுக்கு இயக்குநர்கள்தான் காரணம்: ஸ்ரேயா அதிரடி! (I need to keep doing good work: Shriya Saran )"
Post a Comment