நடிப்பது சமூக சேவையா என்ன? - ஹன்சிகா மோத்வானி

நீங்க நடிகையான கதையைச் சுருக்கமாக சொல்லுங்கள்?
மாடலிங் அப்புறம்தான் சினிமா என்று பலரும் சொல்லுவாங்க. ஆனால் நான் அப்படியில்லை. சின்ன வயசில் இருந்தே சினிமாவில்தான் இருக்கேன். இந்தூரில் பிறந்தேன். அப்பா பிரதீப் மோத்வானி தொழிலதிபர். அம்மா மோனா மோத்வானி டாக்டர். இருந்தாலும் எனக்கு நடிப்பில் ஆசை இருந்தது. காரணம் என் பள்ளிக்கூடம்.
பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எனக்குத் தெரிந்ததையெல்லாம் நடித்து வைப்பேன். அவர்களும் 'நல்லா நடிக்குது இந்த பொண்ணு'ன்னு ப்ரைஸ் கொடுப்பாங்க. அப்படியே நடிப்பு ஆசை வந்து விட்டது. தொடக்கத்தில் 'ஷக்கலக்கா பூம் பூம்'ன்னு ஒரு சீரியல். மந்திரக் கதை. அது எல்லோருக்கும் என்னை பரிச்சயமாக்கியது. "தேங் மெய்ன் நிக்லா ஹோகா சனத்'ன்னு சீரியல். குழந்தை நட்சத்திரமாக என்னை வெளிப்படுத்தியது. ஸ்டார் பரிவார் அளித்த விருது கூட அந்த சீரியலுக்கு கிடைத்தது. அதன் பின் நிறைய சீரியல்கள். அப்புறம்தான் பட வாய்ப்பு வந்தது.
தெலுங்கு டைரக்டர் பூரிஜெகன்நாத் இயக்கிய 'தேசமுதுரு' படம்தான் என் முதல் படம். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தேன். அதன் பின் பாலிவுட் வாய்ப்புகள் வரவே, நானும் ஒரு இந்திய நடிகையாகி விட்டேன். இப்ப மராத்தி, ஹிந்தி, தமிழ், தெலுங்குன்னு எல்லா சினிமாக்களிலும் நான் இருக்கேன்.
தமிழ் சினிமாவில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றி சொல்லுங்க?
எல்லா இந்திய நடிகைகளும் ஆசைப்படுகிற ஒரு இடம் தமிழ் சினிமா. ஒரிய சினிமாவில் என் ப்ரெண்ட் புகழ்பெற்ற நடிகை. அவளுக்குக் கூட தமிழ் சினிமாதான் பிடிச்சிருக்குன்னு சொல்றா. எனக்கும் அப்படித்தான். முதல் படம் 'மாப்பிள்ளை'. சூப்பர் ஸ்டாரின் 'மாப்பிள்ளை' பட ரீமேக். நல்ல தொடக்கம். அது மாதிரி ஒரு கமர்ஷியல் படம் நிறைய பேருக்கு இங்கே கிடைக்காத ஒன்று. எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்ப புதுசு புதுசா நிறைய அனுபவங்கள். தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்ன்னு இப்ப ஆசை வந்திருக்கு.
தனுஷ், ஜெயம் ரவி, விஜய்ன்னு ஸ்டார் வேல்யூ படங்களா நடிச்சுட்டு, இப்ப உதயநிதிக்கு ஹீரோயினா மாறிட்டீங்களே?
நிறைய பேர் இதைக் கேட்கிறாங்க. இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இதுக்கு முன்பு நடிச்ச எல்லா ஹீரோக்களும் ரசிகர்களுக்கும் எந்தளவுக்குத் தெரிஞ்சவங்களோ, அதே மாதிரிதான் உதயநிதியும். ஒரு தயாரிப்பாளராக அவரை சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். தயாரிப்பாளர் நடிக்க வந்தா அவருக்கு ஜோடியா நடிக்க கூடாதா என்ன?
இந்தப் படத்துக்கு அப்புறம் உதயநிதியும் ஸ்டார் வேல்யூக்கு வந்துடுவார். இது அவருக்கான நல்ல தொடக்கமாக இருக்கும். காதல், காமெடின்னு வழக்கமான படம்தான். ஆனால் அதை முதல் படத்தில் செய்வது எந்த ஹீரோவுக்கும் சவால்தான். அதை உதயநிதி சிறப்பாக செய்து முடிச்சிருக்கார்.
பெரிய ஹீரோ, சின்ன ஹீரோன்னு நான் எப்பவும் பார்த்ததே இல்லை. இப்பக் கூட ஹிந்தியில் ஒரு அறிமுக ஹீரோ கூடத்தான் நடிக்கிறேன். கதைக்குதான் எப்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன். நடிகைன்னா எல்லா கேரக்டரையும் நடிச்சு பார்க்கணும். நான் இதை மட்டும்தான் செய்வேன்னு சொல்ல இது என்ன சமூக சேவையா என்ன?
அடுத்து நான் நடிக்கிற இரண்டு படமும் பெரிய படம், மாஸ் டைரக்டர், ஸ்டார் ஹீரோன்னு ஜோடி சேர்ந்திருக்கேன். ஆமாம், 'சிங்கம் -2' ஹரி இயக்க, சூர்யாவுக்கு நான்தான் ஜோடி. எனக்கு டைரக்டர்களும், கதையும்தான் முக்கியம்.
உங்களைக் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கோம். பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான் உங்க கேரியரில் இருக்கு?
உண்மைதான். அது என் லெவலுக்கு கிடைச்ச இடம். சின்ன பட்ஜெட் படங்கள் வேறு ஒரு இடத்தை தரலாம். அதில் எனக்கு விருப்பம்தான். ஆனா இதுவரைக்கும் அமையல. குறிப்பா தமிழில் சின்ன பட்ஜெட் படங்கள் என்றால் கிராமத்து படங்கள்தான். கிராமத்துக் கதைகளுக்கு என் உடம்பும், முகமும் சரியா அமையுமான்னு தெரியலை. 'வேலாயுதம்' படத்துல நடித்தபோது கூட, உங்களை கிராமத்து பொண்ணா ஏத்துக்க முடியலைன்னு நிறைய பேர் சொன்னாங்க.
அதனால் அதில் நான் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டேன். பெரிய பட்ஜெட் படங்களுக்கு என்னை கேட்கிறாங்க. அதை நான் மறுக்க முடியாது. இதுதான் வேணும்ன்னு நான் அடம் பிடிக்க முடியாது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு ரிஸ்க் அதிகமா தேவைப்படுது. அதே அளவுக்கு பப்ளிசிட்டியும் பெருசா கிடைக்கும்.
ஒரு நடிகையா எனக்கு படத்தோட பட்ஜெட் முக்கியம் கிடையாது. எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் நடிக்க முடியும். சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட்ன்னு நடிப்பில் வித்தியாசம் எந்த நடிகையாலும் காட்ட முடியாது. ஹிந்தியில் சின்ன பட்ஜெட் படங்களில் நடிச்சிக்கிட்டுதான் இருக்கேன். அங்கே அது எடுபடுது. இங்கே சிட்டி சப்ஜெட் கதைகளை சின்ன பட்ஜெட்டில் எடுக்க முடியாது.
பிரபுதேவா - நயன்தாரா பிரிவுக்கு ஹன்சிகாதான் காரணம் என சொல்றவங்களும் இருக்காங்களே?
இதை யார் பரப்பி விட்டாங்கன்னு தெரியலை. இந்த கேள்விக்கு அப்பப்ப பதில் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, தொடர்ந்து இந்த விஷயம் என்னை நோக்கியே வந்துக்கிட்டு இருக்கு. சினிமாவில் சில விஷயங்கள் தானாகவே அமைந்து விடும்.
அது போல்தான் இதுவும் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். மற்றபடி இதுக்கும் எனக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. இப்ப வரைக்கும் பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரிதான். சில வாரங்களுக்கு முன்பு கூட பேசினேன். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஸ்டில்ஸ் நல்லாயிருக்குன்னு சொல்லி வாழ்த்தினார். அந்தளவுக்கு எங்க நட்பு இருக்கு. அதைக் களங்கப்படுத்த வேண்டாம்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' எப்படி வந்திருக்கு. உங்க ரோல் என்ன?
டீன் ஏஜ் லவ்தான் கதை. காதல் இங்கே பல வடிவங்களில் வந்தாச்சு. அதில் ஒரு விஷயத்தை காமெடியாக இந்தப் படம் சொல்லும். இந்த படம் என்னை நிச்சயம் வேறு ஒரு லெவலுக்கு கொண்டு போகும். டைரக்டர் ராஜேஷ் சாரோட இரண்டு படங்களையும் பார்த்திருக்கேன். அதையெல்லாம் விட இது ஒரு படி மேலே போய் நிற்கும். அந்தளவுக்கு எனக்கு நம்பிக்கை கிடைச்சிருக்கு. நல்ல விஷயம். பாடல்கள் ரசிக்கும்படி வந்திருக்கிறது.
எந்த மாதிரி படங்கள் செய்ய ஆசை?
என்னால் ஒரு கிராமத்து பொண்ணாக வந்துட்டு போக முடியாது. அதுக்கு காரணம். என் உடல்வாகுதான். ஐஸ்கீரிம் பொண்ணு மாதிரி இருந்துட்டு, அப்படியொரு படத்தில் நடிக்க ஆசைப்பட கூடாது. எனக்கு எது சரி வருமோ அந்தப் படங்களில் மட்டுமே நடிப்பேன்.
நான்கைந்து மொழிகளில் நடிக்கிறீங்க. எந்த மொழி பெஸ்ட்?
என்னைக் கேட்டா ஹிந்திதான் பெஸ்ட். ஏன்னா எனக்குத் தெரிந்த கல்ச்சர் அங்கே இருக்கு. அப்புறம் மராத்தி மொழி தெரியும். தெலுங்கு சினிமா என்னை அறிமுகப்படுத்தியதால் அதுவும் பிடிக்கும். தமிழ் சினிமா ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இப்ப நான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். கேக்கறிங்களா... 'போயிட்டு வாங்க' கரெக்டா?

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
1 Respones to "நடிப்பது சமூக சேவையா என்ன? - ஹன்சிகா மோத்வானி"
COPPY TO PAST THIS VIDEO SEX SITE LINK>>> http://freedesiporno.com/
COPPY TO PAST THIS VIDEO SEX SITE LINK>>> http://freedesiporno.com/
COPPY TO PAST THIS VIDEO SEX SITE LINK>>> http://freedesiporno.com/
4 July 2015 at 08:28
Post a Comment