ஸ்ருதி பெரிய குறும்புக் கோழி! - சுந்தர்
'மயக்கம் என்ன', '3' படங்களில் தனுஷின் 'நண்பேன்டா'வாக நடித்து இருக்கும் சுந்தர், சென்னையின் பிரபல மாடல் போட்டோ கிராஃபர், பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ரஜினி, கமல் மகள்களின் ஃப்ரெண்ட்ஷிப் முதல் ஆண்ட்ரியாவுடனான காதல் வரை சுந்தரிடம் பேசியதில் இருந்து...
நான் பெங்களூர் பையன். ப்ளஸ் டூ முடிச்சதும் சென்னை லயோலாவில் விஸ்காம் சேர்ந்தேன். அப்போ என் கிளாஸ்மேட் பொண்ணுக்கு சும்மா ஜாலியா ஒரு போர்ட்ஃபோலியோ பண்ணிக் கொடுத்தேன். அதைவெச்சு அவ மிஸ் இந்தியா செமி ஃபைனல் வரை போயிட்டா. அப்போதான் ஒரு போட்டோகிராஃபரா என் பேர் வெளியே தெரிஞ்சது. ஏகப்பட்ட மாடல்கள், சினிமா பிரபலங்களை க்ளிக் பண்ண ஆரம்பிச்சேன். ரஜினி, சூர்யா, விக்ரம், ஆர்யா, பிரசாந்த், த்ரிஷா, ஆண்ட்ரியா, ரிச்சா, சமீரா ரெட்டினு லிஸ்ட் ரொம்பவே பெருசு!
இதுக்கு இடையில ஒரு சின்ன முன் கதை. 18 வருஷமா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன். நடுவில் தனுஷ் இயக்கின நாலு குறும் படங்களில் நடிச்சேன். அவர்தான், 'சுந்தர் நல்லா நடிக்கிறான்... வாய்ப்பு கொடுங்க'னு பல இயக்குநர்கள்கிட்ட சிபாரிசு பண்ணி என்னை சினிமா நடிகன் ஆக்கினார்!
ரஜினி - கமல் பொண்ணுங்களை எப்படி ஃப்ரெண்ட் பிடிச்சு வெச்சிருக்கீங்க?
ஐஸ்வர்யாவை சின்ன வயசுல இருந்தே தெரியும். அதனால '3' பட ஷூட்டிங் ஸ்பாட்ல என்னதான் அவங்க டைரக்டரா இருந்தாலும் 'மேடம்'னு கூப்பிட வரலை. எப்பவும்போல 'ஐஸ்'னுதான் கூப்பிட்டேன். 'நான் படம் இயக்கினா, உனக்குக் கண்டிப்பா வாய்ப்பு தரேன்'னு முன்னாடி சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து இப்போ என்னை நடிக்கவெச்சிருக்காங்க.
ஸ்ருதியும் ஸ்கூல் கேர்ளா இருந்தப்ப இருந்தே தெரியும். அப்புறம் ஒரு மாடலாகவும் என் கேமராவுக்கு போஸ் கொடுத்திருக்காங்க. இப்போ பார்த்தா ஹீரோயினா வளர்ந்து நிக்கிறாங்க. 'கமல் சார் பொண்ணுங்கிறதால நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பாங்க'னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா, ஸ்பாட்ல அந்த எண்ணத்தைக் காலி பண்ணிட்டாங்க ஸ்ருதி. பரமசாதுவா இருக்காங்க ஷூட்டிங் ஸ்பாட்ல. ஆனா, ஸ்ருதி எவ்வளவு பெரிய குறும்புக் கோழினு நெருங்கிப் பழகினவங்களுக்குத்தான் தெரியும்!
நீங்களும் ஆண்ட்ரியாவும் காதல்ல இருக்கிறதா ஒரு தகவல்... அது உண்மையா?
நாடகங்களில் நடிக்கிறப்ப ஆண்ட்ரியா பழக்கம். அது அப்படியே நட்பாகி நெருக்கம் அதிகமாச்சு. ரெண்டு பேருக்கும் இடையில நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு. அது காதலா மாறுவதற்கு வாய்ப்பு இருக்குதான். அப்படி மாறினாலும் எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை இல்லை. ஆனா, இப்ப எங்களுக்குள்ள இருக்கிறது மரியாதையான நட்பு மட்டுமே!

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "ஸ்ருதி பெரிய குறும்புக் கோழி! - சுந்தர்"
Post a Comment