நடிகைகளின் பரிதாபகரமான உண்மை வெளிச்சத்துக்கு வரும்! - புன்னகைப்பூ கீதா

மலேசியாவில் தொகுப்பாளினியாக இருந்தபோது நேயர்களோடு நடந்த மறக்க முடியாத அனுபவம் எது?
எஃப். எம். நேயர்களோடு பேசுறதே ஒரு தனி அனுபவம். அவ்வளவு ஃப்ரெண்ட்ஸ் எனக்கு இருக்காங்க. அதுல கடந்த ஆறு மாசமா ஒரு பொண்ணு என் கூட பேசிக்கிட்டிருந்தாங்க. இதுல எனக்கு ரொம்பவே ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க. அவங்கள பத்தி முழு விஷயம் எனக்குத் தெரியும். அவங்க காதலனை போன்லயே எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. சமீப நாட்களில் அவங்ககிட்டேயிருந்து போனே வரல. அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு பேசினாங்க. ஒரு கார் விபத்துல காதலன் இறந்து போயிட்டார். அந்தப் பெண்ணோட ரெண்டு காலும் உடைஞ்சு போயிடுச்சு. இதைக் கேட்டதும் நான் அப்படியே நொறுங்கிப் போயிட்டேன். லைவ்ல என்னால அழுகையை அடக்க முடியாமல் துடிச்சிட்டேன்.
சமூகம் நடிகையைப் பார்க்கும் பார்வையை எந்தளவுக்கு உங்கள் 'நடிகையின் வாக்குமூலம்' படம் மாற்றும்?
முழுமையாக மாற்றிவிடுமா என்பதை விட, திரைக்குப் பின்னாடி நடக்கும் ஒரு பரிதாபகரமான உண்மையை நாம வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும்போது அது நிச்சயமா சமூகத்தின் மனசாட்சியை உறுத்தும். நடிகையின் அழகான சிரிப்புக்குப் பின்னாடி எவ்வளவு அவஸ்தை இருக்கு என்பது தெரியும். எந்த நடிகை பார்த்தாலும் இது நம்ம வாழ்க்கையிலும் நடந்திருக்கேனு நினைப்பாங்க. இதற்கு எதிர்ப்பு வரும்னு சொன்னாங்க. ஆனா அப்படி எதுவும் வரல.
நடிகைகளுக்காக பரிதாபப் படுவதுபோல அவங்களை வியாபார ரீதியாக பயன்படுத்திக்கொள்வது மாதிரி இருக்கே?
நிச்சயமா அப்படிச் சொல்ல முடியாது. காரணம், இந்தப் படத்தை நான் லாபம் கிடைக்கும்னு நம்பி எடுக்கல. எதுவானாலும் பரவாயில்ல ஒரு பதிவா இது இருக்கட்டும்னுதான் நினைக்கிறேன்.
சரி... இப்படியே சினிமாவுக்குள்ளேயே இருந்தால் எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?
சீக்கிரமே சொல்றேன். அதுவும் கண்டிப்பா காதல் கல்யாணம்தான். அந்த அப்பாவியைப் பார்த்ததும் சொல்றேன், என்று அழகாக புன்னகைத்தார் கீதா.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "நடிகைகளின் பரிதாபகரமான உண்மை வெளிச்சத்துக்கு வரும்! - புன்னகைப்பூ கீதா"
Post a Comment