அசின் இந்தியில் 'கஜினி' படம் மூலம் அறிமுகமானார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. முதல் படத்திலேயே முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். இந்தியில் ஏற்கனவே கரீனா கபூர் முதல் இடத்தில் உள்ளார். அவர் நடித்து ரிலீசான '3 இடியட்ஸ்', 'பாடிகார்ட்', 'ரா ஒன்' படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் குவித்தன. எனவே முதல் இடத்தை தொடர்ந்து அவர் தக்க வைத்து வருகிறார். அசின் நடித்த 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் தோல்வி அடைந்ததால் அவர் மார்க்கெட் சரிந்தது. ஆனால் அவரது ரெடி படமும், சமீபத்தில் ரிலீசான 'ஹவுஸ்புல் 2' படமும் ஹிட்டாயின. ரெடி வசூல் ரூ. 100 கோடியை தாண்டியது. 'ஹவுஸ்புல்' படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படமும் ரூ. 100 கோடி வசூலை தாண்டும் என்கின்றனர். இதுகுறித்து அசின் கூறும்போது, இந்தியில் நான் ஏற்கனவே நடித்த இரு படங்கள் ரூ. 100 கோடி வசூல் ஈட்டின. 'ஹவுஸ்புல்' படமும் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. எனவே நானும் இந்தியில் நம்பர் 1 நடிகையாகி விட்டேன். கரீனா கபூருக்கு இணையாக என் படங்களும் வசூல் குவிக்கின்றன என்றார். தலைக்கனம் தலைய தட்டாம பாத்துக்கோங்கம்ணி........
Share your views...
0 Respones to "கரீனாவுக்கு இணையா வந்துட்டேன் - அசின் அலட்டல்! (Has the success of 'Housefull 2' gone to Asin's head?)"
Share your views...
0 Respones to "கரீனாவுக்கு இணையா வந்துட்டேன் - அசின் அலட்டல்! (Has the success of 'Housefull 2' gone to Asin's head?)"
Post a Comment