நான் என் வேலையில் மட்டுமே கவனமா இருக்கேன்: ஸ்ருதிஹாசன்
'கொல வெறி' பாட்டு இவ்வளவு ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?
நிச்சயமா எதிர்பார்க்கலை. முதல் தடவை கேட்டப்பவே பாட்டு செம துறு துறுன்னு இருந்துச்சு. தமிழ்நாட்ல ஹிட் ஆகும்னு நினைச்சோம். ஆனா, படம் ரிலீஸ் ஆகிறதுக்குள்ள அது உலகத்தையே ஒரு ரவுண்ட் அடிச்சிருச்சு. பாட்டுல இருக்குற ஒரு 'டோன்ட் கேர்' தன்மை, சிம்பிள் வார்த்தைகள், அதோட கொஞ்சம் காதல்.... இதெல்லாம்தான் இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதில் தனுஷின் உழைப்பு நிறைய இருக்கு!
இசையமைப்பாளர், பாடகி அவதாரத்தைவிட்டுட்டு நடிப்பில் மட்டும் முழு மூச்சா இறங்கிட்டீங்களே?
எனக்கு ரெண்டுமே முக்கியம். இப்பவும் சான்ஸ் கிடைக்கிறப்ப அதே காதலோட பாடவும் செய்றேன். தமிழின் டாப் இசையமைப்பாளர்களிடம் பாடிட்டேன். எனக்கு மியூஸிக், நடிப்பு ரெண்டுமே பிடிச்சிருக்கு. பாடும்போது பாடல் வரிகளின் மீதான கவனம், உச்சரிக்கும் லாவகம் முக்கியம். நடிக்கும்போது எக்ஸ்பிரஷன்ஸ், இயக்குநர் சொன்ன விஷயத்துக்கு மேல நம்ம கிரியேட்டிவிட்டி... அதெல்லாம் முக்கியம். ரெண்டையும் அழகாவே பேலன்ஸ் பண்றேன்னு நினைக்கிறேன்!
அப்பாகூட நடிப்பீங்களா?
'ச்சோ... இந்தியும் தமிழுமா நான் நாலஞ்சு படம்தான் பண்ணியிருக்கேன். அவர் ஒரு லெஜன்ட். அவர் பக்கத்தில் நின்னு நடிக்க எனக்கு நிறைய டைம் ஆகும். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் வேணும். எனக்கு அதுக்குத் தைரியம் வரணும். வேண்டாம்... இப்ப இதை யோசிக்கிறது ரொம்ப சீக்கிரம். இன்னும் லேர்னிங் பிராசஸ் நிறைய இருக்கு!
அப்பா அப்பாதான்... ஓ.கே! ஆனா, அம்மா சரிகாவும் இப்ப நல்ல படங்களில் அருமையா நடிச்சுட்டு இருக்காங்களே...
எனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும். கடினமான உழைப்பாளி. 20 வருஷத்துக்கு முன்னாடியே நடிப்புக்கு ஃபுல்ஸ்டாப் வெச்சுட்டாங்க. ஆனா, இப்ப ஆரம்பிச்சதும் உடனே தேசிய விருது வாங்குற அளவுக்கு பெர்ஃபார்ம் பண்றாங்க. அவங்க எப்பவுமே சும்மா இருந்தது இல்லை. படிப்பு, காஸ்ட்யூம்னு இழுத்துப் போட்டுக்கிட்டு ஏதாச்சும் பண்ணிட்டே இருப்பாங்க. சென்னையில் அப்பா பக்கத்திலேயே இருப்பதால், கொஞ்சம் அப்பா பேச்சு நிறைய இருக்கும். அவ்வளவுதான்!
தங்கச்சி அக்ஷரா ஆரம்பத்திலேயே டைரக்ஷன் பக்கம் இறங்கிட்டாங்க. நீங்க அவங்களுக்கு டிப்ஸ் கொடுப்பீங்களா... இல்லை அவங்க உங்க நடிப்பை கமென்ட் பண்ணுவாங்களா?
எதுவுமே இல்லை. அப்பாவுக்கு எப்பவும் அதெல்லாம் பிடிக்காது. ஒவ்வொருத்தரையும் தனி மனிதரா ட்ரீட் பண்றதுதான் அப்பா பழக்கம். நான் நடிப்பில், சினிமாவில் எதுவும் சந்தேகம் வந்தா... அப்பாகிட்ட கேட்பேன். அது ரொம்ப சின்ன கம்யூனிகேஷனா இருக்கும். அவ்வளவுதான்! அதுக்காக ஒவ்வொரு விஷயத்துக்கும் 'அப்பா ப்ளீஸ்'னு அவர்கிட்ட போய் நிக்க மாட்டேன். 'என் 50 வயசுக்கு நிறைய அட்வைஸ் உங்களுக்குக் கிடைக்கும். ஆனா, அதுக்கு நேரம் இல்லாதபடி, அவசியம் இல்லாதபடி பார்த்துக்கங்க!'னு சொல்வார். அக்ஷரா செம ஷார்ப். விளம்பரங்கள், படங்கள்னு ரொம்ப உற்சாகமா இருக்கா. என்கிட்ட ஏதாவது கேட்டா... நான் பதில் சொல்வேன். மத்தபடி நாங்க ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்!
தனுஷுக்கும் உங்களுக்கும் சம்திங் சம்திங்னு பரபரப்பா இருக்கு. இதுக்கு ஸ்ருதியின் பதில் என்ன?
நத்திங்! இது மாதிரியான எந்த விஷயங்களுக்கும் நான் ரியாக்ட் பண்றது இல்லை. குறிப்பா, இப்ப நான் எதுவும் பண்ணவே போறது இல்லை. அப்படி எதுவும் பண்ணினால், அதுக்கு முடிவே இல்லை. போய்க்கிட்டே இருக்கும். நான் நல்லா நடிக்கிறேனா, நல்லாப் பாடுறேனான்னு மட்டும் பாருங்க. அதுல எதுவும் மிஸ்டேக் இருந்தா சொல்லுங்க.... 'அப்படிங்களா... சரி பண்ணிக்கிறேன்'னு கேட்டுப்பேன். இந்த விஷயத்துல அப்பாகிட்ட நான் கத்துக்கிட்ட அமைதிதான் இப்போ எனக்கு உதவியா இருக்கு. நான் என் வேலையில் மட்டுமே கவனமா இருக்கேன். அதை இன்னும் பெட்டர் ஆக்க என்னலாம் முயற்சிகள் எடுக்கணுமோ, அதை மட்டும் பண்ணுவேன். மத்தபடி அப்பா கொடுத்த அந்த அமைதி அட்வைஸ் இருக்கு. அதுக்கு மேல எனக்குக் கவலை எதுக்கு?

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "நான் என் வேலையில் மட்டுமே கவனமா இருக்கேன்: ஸ்ருதிஹாசன்"
Post a Comment