என்னோட ஆசையெல்லாம் நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான்! - கார்த்திகா

அன்னக்கொடி கேரக்டர் எப்படி?
அன்னக்கொடி ஆடு மேய்க்கும் பெண். அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். இந்த கேரக்டர் பற்றி பாரதிராஜா சார் பேசும்போது 'அன்னக்கொடி கேரக்டர் என் பல நாள் கனவு. நீ சரியா இருப்பேன்னு நினைக்கிறேன்'னு சொன்னார். அவர் சொன்ன அந்த நிமிஷத்திலிருந்து எனக்குள்ள அன்னக்கொடி ஆத்மா நுழைஞ்சிருச்சு. ஒரு பெண்ணோட குழந்தைப் பருவத்திலிருந்து வயதான பருவம் வரைக்கும் வாழ்க்கையைச் சொல்கிற கேரக்டர்.
பாரதிராஜாவை நீங்க முதன்முதலில் எப்போது சந்திச்சீங்க?
என்னோட சின்ன வயசிலயே பார்த்திருக்கேன். ஆனால், அதைவிட நான் ஒரு டான்ஸரா அவரை சந்திச்சதுதான் மறக்க முடியாதது. 'பொம்மலாட்டம்' ஷூட்டிங் சமயத்தில் எங்க மும்பை வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்காக நான் சிதம்பரத்துக்கு வர ரெடியாகிட்டிருந்தேன். அம்மா முதன் முதல்ல 'என் குருநாதர் முன்னால ஆடு'ன்னு சொன்னாங்க. அங்கேயே பரதம் ஆடினேன்.
இந்த கேரக்டருக்கு முதலில் ப்ரியாமணியைத் தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறதே?
அது அமீர் - இனியா நடிக்கும் கதாபாத்திரத்திற்காக. இனியாவுக்கு பதில் ப்ரியாமணியை பேசியிருந்தாங்க. அமீர் ஜோடியாக ப்ரியாமணி இருந்திருக்க வேண்டியதுனு யூனிட்ல பேசிக்கிட்டாங்க.
ஒரு மாடர்ன் பொண்ணு நீங்க. எப்படி ஆடு மேய்க்கவும் கிராமிய பழக்க வழக்கங்களுக்கும் உங்களை மாத்திக்கிட்டீங்க?
டைரக்டரோட எல்லா கிராமத்துப் படங்களையும் நான் டி.வி.டி.யில் போட்டுப் பார்த்தேன். அதுல பாடி லாங்குவேஜ் கத்துகிட்டேன். போட்டோ ஷூட்ல மேக்கப் இல்லாமல் வெறும் சட்டை பாவாடையுடன் ஆட்டுக்குட்டியை மேய்ச்சதைப் பார்த்து அம்மாவே அசந்துட்டாங்க. என்னோட ஆசையெல்லாம் மதுரைத் தமிழை, அதைப் பேசுற ஸ்டைலை எப்படியாவது கத்துக்கிட்டு என் கேரக்டருக்கு நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான். டைரக்டர் என்ன சொல்வாரோ தெரியல.
பட பூஜைக்கு ரொம்பவும் கிளாமரான காஸ்ட்யூம்ல வந்திருந்தீங்களே?
நான் கிராமத்துப் பொண்ணுங்கபோல புடவை கட்டிக்கிட்டு வரத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் டைரக்டர்தான், 'நீ கிளாமராவே வா. அப்பதான் இந்த அன்னக்கொடிக்காக நீ எப்படி மாறியிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்'னு சொன்னார். அதனால பூஜைக்கு நான் அப்படி வர வேண்டியதாயிடுச்சு.(சிரிக்கிறார்)
சரியா நடிக்கலேன்னா டைரக்டர் அடிப்பாருங்கிறது தெரியுமா?
கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், அம்மா என்கிட்ட 'டைரக்டர் நடிச்சுக் காண்பிக்கிறதுல பத்து சதவீதம் நடிச்சால் போதும் உன்னை விட்டுடுவார்'னு சொன்னாங்க. இப்பகூட ஷூட்ல ஹீரோ லட்சுமனோடு காதல் காட்சியில் எப்படி காதலோடு பாக்கணும்னு டைரக்டர் சொல்லித் தந்தார். எனக்கே வெட்கமா போயிடுச்சு. அவ்வளவு லவ்லியான ஆக்ஷன்.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "என்னோட ஆசையெல்லாம் நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான்! - கார்த்திகா"
Post a Comment