த்ரில்லுக்காக தில்லா இறங்கிடுவேன்! - தன்ஷிகா
இலியானா ஸ்பெஷல் கிளாமர் பாடலா... சினேகா ஸ்பெஷல் கிளாமர் நடிப்பா... 'எதற்கும் தயார்' என்று வில்லாக நிற்கிறார் தன்ஷிகா. தஞ்சைத் தரணியில் இருந்து அச்சு அசலாக ஒரு தமிழ்ப் பொண்ணு! "நான் எட்டு வயது வரை வாழ்ந்தது தஞ்சாவூரில். பிறகு சென்னைவாசி. ப்ளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தப்போ, ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஜனநாதன் சார் என்னைப் பார்த்தார். 'பேராண்மை' பட வாய்ப்பு கிடைத்தது. இப்போ 'அரவான்' என்றவரிடம் குட்டி பேட்டி என்றதும்.. உடனே ஓகே சொல்லிட்டார்!
'அரவான்'ல நடிக்க சிரமமா இருந்ததா?
ரொம்ப! பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். 'முதல் மரியாதை', 'நாடோடித் தென்றல்' படங்கள் பார்த்து ஹோம் வொர்க் பண்ணிட்டுத்தான் ஸ்பாட்டுக்குப் போனேன். ஷூட்டிங்கில் மதுரைப் பேச்சு வராம உளறிட்டே இருந்தேன். ஆனா, டப்பிங் வர்றதுக்குள் கத்துக்கிட்டு சரியாப் பேசிட்டேன். சென்னைப் பொண்ணாவே வளர்ந்ததால், கிராமத்துப் பெண்ணுக்கான பாடி லாங்குவேஜ், தாடையைக் கீழ இறக்கிப் பேசும் மேனரிஸம், கண் சிமிட்டல் வனப்பேச்சியா மாற ரொம்பவே சிரமப்பட்டேன். வசந்தபாலன் சார்தான் என்னோட ஒவ்வொரு அசைவையும் கன்ட்ரோல் பண்ணார். படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்கள் மனசுல இடம் பிடிக்கிற கேரக்டரா அமைஞ்சது என்னோட அதிர்ஷ்டம்!
என்னதான் அழகு, தகுதி, திறமை இருந்தாலும்... தமிழ்ப் பெண்கள் கோலிவுட்டில் சாதிப்பது சிரமமாச்சே... போட்டியை எப்படிச் சமாளிக்கப்போறீங்க?
'பேராண்மை'யில் தைரியமான பொண்ணு, 'மாஞ்சா வேலு'வில் ரொமான்ஸ், 'அரவான்'ல ஹோம்லினு அத்தனை ஃப்ளேவர்ஸூம் என்கிட்ட இருக்கு. அதனால், பயம் இல்லை. போட்டின்னாதான் ஒரு த்ரில் இருக்கும். எனக்கு த்ரில் பிடிக்கும்!
தன்ஷிகாவின் நிஜ கேரக்டர்?
எங்கே கிளம்புறதுக்கு முன்னாடியும் பிரேயர் பண்ணிட்டுத்தான் கிளம்புவேன். கொஞ்சம் முன்கோபக்காரி. த்ரில்லுக்காக தில்லா இறங்கிடுவேன். மத்தவங்களுக்கு உதவப் பிடிக்கும். 'அரவான்' புரொமோஷனுக்காக கோவை போயிருந்தப்ப, 10 மணி நேர மின்வெட்டால படிக்கவே சிரமமா இருக்குனு பசங்க சொன்னாங்க. அவங்களுக்கு எமர்ஜென்சி லைட், நோட்புக் வாங்கிக் கொடுத்தேன். அப்போ ஒரு சின்னக் குழந்தை 'தேங்க்யூ அக்கா'னு சொல்லிப் பாசமா முத்தம் கொடுத்தது இன்னும் கன்னத்துல ஜில்லுனு இருக்கு!
Subscribe to:
Post Comments (Atom)


Previous Article
Share your views...
0 Respones to "த்ரில்லுக்காக தில்லா இறங்கிடுவேன்! - தன்ஷிகா"
Post a Comment