'சகுனி' கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவன்! - கார்த்தி

'சகுனி' படப்பிடிப்பில் கார்த்தியை சந்தித்தோம்.
'சகுனி' நல்லவனா கெட்டவனா?
கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவன். ஆனா அவன் நல்லவன்னு தெரியறதுக்குள்ள உங்கள படுத்தி எடுத்திருவான். அதை தாங்கித்தான் ஆகணும். கிராமத்திலிருந்து கிளம்பி வரும் ஒருத்தன் சென்னைக்குள் புகுந்து எப்படி ஜெயிக்கிறான் என்பது கதை. இதுல அரசியல் என்கிற புது தளம் எனக்கு கிடைச்சிருக்கு. அரசியலால் மாறிப் போன அவன் பல பேர் வாழ்க்கையையே மாற்றுகிறான்.
பரபரப்பாக பேசப்படும் அரசியல் ஊழல் இந்தப் படத்திலும் இருக்கிறதா கேள்விப்பட்டோமே?
படம் முழுக்க அரசியல் இருக்குமே தவிர சீரியஸாக யாரையும் விமர்சனம் செய்யல. என்னைச் சுற்றியுள்ள கேரக்டர்கள் அரசியல்வாதிகள். காமெடி தான் நோக்கம். படம் முழுக்க சிரிப்புச் சரவெடி கொளுத்தப் போறோம் நானும் சந்தானமும். மற்றபடி எந்த அரசியல் தலைவரையும் குறிப்பிடல. எந்த ஊழல் சம்பவத்தையும் சொல்லல.
உங்க புது மனைவி ரஞ்சனி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றாங்களா?
பெரும்பாலும் நான் வெளியூர்லயே இருக்க வேண்டியிருப்பதால ரஞ்சனியையும் கூட கூட்டிட்டுப் போயிடுவேன். என்கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் ஒவ்வொரு ஊர்லயும் இருக்காங்க. அவங்க ஃபேமிலியோட என் மனைவி நல்லா செட் ஆகிடுறாங்க. ஷூட்டிங் முடியுற வரைக்கும் அவங்க வீட்லயே தங்கிக்குவாங்க. எப்பவாவது திடீர்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்பாங்க.
ப்ரணிதா நல்லா செட் ஆகிட்டாங்களா...?
நல்ல பொண்ணு. பிரமாதமா நடிக்கிறாங்க.. நல்லா டான்ஸ் ஆடுறாங்க. இதுவரைக்கும் தமிழ் சினிமா காலடி படாத நாடு போலந்து. அந்த நாட்டுல பாட்டு சீன் எடுத்தோம் மைனஸ் டிகிரி குளிர். இதுல ப்ரணிதாவோடு டூயட்டுக்கு எப்படி வாயசைக்கிறது. வாயைத் திறக்கவே முடியல. தந்தியடிக்குது. அதோடு ப்ரணிதாவோடு டூயட்டை முடிச்சேன்.
சூர்யாவும், நீங்களும் சேர்ந்து நடிக்கிற திட்டம் என்னாச்சு?
ரெண்டு பேரும் வீட்ல ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடவே முடியல. அப்புறம் எப்படி சேர்ந்து ஒர்க் பண்றது. அவரு ரஷ்யாவில் இருந்து போன் பண்றார். நான் கேரளாவிலிருந்து அவருக்குப் பேசுறேன். இப்படி ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிக்கிட்டிருக்கோம். அடுத்து எனக்கு ராஜேஷ் படம் இருக்கு. அண்ணனுக்கு 'மாற்றான்' முடிந்த பிறகு 'சிங்கம்' ரெண்டாம் பாகம் இருக்கு. அதனால நேரம் கிடைச்ச பிறகு பார்க்கலாம்.

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "'சகுனி' கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவன்! - கார்த்தி"
Post a Comment