நான் எப்பவும் இயக்குநரின் நடிகை! - அஞ்சலி

மாஸ் ஹீரோ, அறிமுகம்னு கலந்துகட்டி நடிக்கிறீங்களே... என்னதான் ஐடியா உங்க மனசுல?
'கற்றது தமிழ்' ஆனந்தி, 'அங்காடித் தெரு' கனி, 'எங்கேயும் எப்போதும்' மணிமேகலை மாதிரி உங்களுக்காகவே ஒரு கேரக்டர் பண்ணியிருக்கோம். அதுல நீங்க மட்டும்தான் செட் ஆவீங்கனு கேட்டு, எத்தனையோ புது இயக்குநர்கள் வர்றாங்க. அதேநேரம், 'பவர்ஃபுல் ப்ளஸ் செம கிளாமர் கேரக்டர். ரெண்டையும் ஒரே ஆளா உங்களாலதான் சமாளிக்க முடியும்'னு சீனியர்ஸ் வர்றாங்க. அப்போ நான் போற ரூட் கரெக்ட்தானே? நான் எப்பவும் இயக்குநரின் நடிகை. அவ்வளவுதான்!
போற ரூட் எல்லாம் சரின்னா, அப்போ ஏன் தமிழின் டாப் ஸ்டார் ஹீரோக்களுடன் அஞ்சலி இன்னும் நடிக்கலை?
தெலுங்கில் வெங்கடேஷ், மகேஷ் பாபுனு ரெண்டு பேருமே டிரெண்ட் செட்டர் ஹீரோஸ். அவங்க ரெண்டு பேரும் முதல்முறையா சேர்ந்து நடிக்கும் 'சீதம்மா வகிட்லே ஸ்ரீமல்லி செட்டு' படத்தில் நான் நடிக்கும் கேரக்டர்தான் சீதம்மா. மாஸ் ஹீரோக்கள் ரெண்டு பேர் என் கேரக்டர் பேரோட ஆரம்பிக்கிற படத்தில் நடிக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்? தமிழிலும் அந்த மாதிரி நிலை வரும்!
இப்போ தமிழ்ல என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?
சுந்தர்.சி சார் இயக்கும் 'மசாலா கஃபே' படத்தில் விமல், சிவா ரெண்டு பேருமே ஹீரோ. சுந்தர் சாரின் வழக்கமான காமெடி கலக்கல் படம். இதில் நான் ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்றேன். அப்புறம் முருகதாஸ் சார்கிட்ட '7ஆம் அறிவு' வரை வேலை பார்த்த கின்ஸ்லே இயக்கும் படத்தில் நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி சரவணன்தான் ஹீரோ. இதில் 'எங்கேயும் எப்போதும்' மணிமேகலைக்கு நேரெதிர் கேரக்டர்!
காதல், கல்யாணம்னு உலவுற வதந்திகளுக்கு நீங்களே பதில் சொல்லிடுங்களேன்...
அதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனா, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு, நான் ரசிச்சு ரசிச்சு நடிக்கிற அளவுக்கு நல்ல நல்ல படங்கள் கையில் இருக்கு. முதல்ல அதுல வர்ற ஹீரோக்களைக் காதலிச்சுட்டு வர்றேன். அப்புறம் ரியல் லைஃப் ஹீரோ யார்னு பார்க்கலாம்!

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "நான் எப்பவும் இயக்குநரின் நடிகை! - அஞ்சலி"
Post a Comment