நான் என் வேலையில் மட்டுமே கவனமா இருக்கேன்: ஸ்ருதிஹாசன்




 Tamil Celebrity I'M CONCENTRATING ON MY WORK ALONE: SHRUTI HASSAN ஸ்ருதி அப்படியே அவர் அப்பா மாதிரி. யோசிக்காமல்... ஆனால், நம்மை யோசிக்க வைப்பதுபோலப் பேசுகிறார்.
'கொல வெறி' பாட்டு இவ்வளவு ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?
நிச்சயமா எதிர்பார்க்கலை. முதல் தடவை கேட்டப்பவே பாட்டு செம துறு துறுன்னு இருந்துச்சு. தமிழ்நாட்ல ஹிட் ஆகும்னு நினைச்சோம். ஆனா, படம் ரிலீஸ் ஆகிறதுக்குள்ள அது உலகத்தையே ஒரு ரவுண்ட் அடிச்சிருச்சு. பாட்டுல இருக்குற ஒரு 'டோன்ட் கேர்' தன்மை, சிம்பிள் வார்த்தைகள், அதோட கொஞ்சம் காதல்.... இதெல்லாம்தான் இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதில் தனுஷின் உழைப்பு நிறைய இருக்கு!
இசையமைப்பாளர், பாடகி அவதாரத்தைவிட்டுட்டு நடிப்பில் மட்டும் முழு மூச்சா இறங்கிட்டீங்களே?
எனக்கு ரெண்டுமே முக்கியம். இப்பவும் சான்ஸ் கிடைக்கிறப்ப அதே காதலோட பாடவும் செய்றேன். தமிழின் டாப் இசையமைப்பாளர்களிடம் பாடிட்டேன். எனக்கு மியூஸிக், நடிப்பு ரெண்டுமே பிடிச்சிருக்கு. பாடும்போது பாடல் வரிகளின் மீதான கவனம், உச்சரிக்கும் லாவகம் முக்கியம். நடிக்கும்போது எக்ஸ்பிரஷன்ஸ், இயக்குநர் சொன்ன விஷயத்துக்கு மேல நம்ம கிரியேட்டிவிட்டி... அதெல்லாம் முக்கியம். ரெண்டையும் அழகாவே பேலன்ஸ் பண்றேன்னு நினைக்கிறேன்!
அப்பாகூட நடிப்பீங்களா?
'ச்சோ... இந்தியும் தமிழுமா நான் நாலஞ்சு படம்தான் பண்ணியிருக்கேன். அவர் ஒரு லெஜன்ட். அவர் பக்கத்தில் நின்னு நடிக்க எனக்கு நிறைய டைம் ஆகும். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் வேணும். எனக்கு அதுக்குத் தைரியம் வரணும். வேண்டாம்... இப்ப இதை யோசிக்கிறது ரொம்ப சீக்கிரம். இன்னும் லேர்னிங் பிராசஸ் நிறைய இருக்கு!
அப்பா அப்பாதான்... ஓ.கே! ஆனா, அம்மா சரிகாவும் இப்ப நல்ல படங்களில் அருமையா நடிச்சுட்டு இருக்காங்களே...
எனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும். கடினமான உழைப்பாளி. 20 வருஷத்துக்கு முன்னாடியே நடிப்புக்கு ஃபுல்ஸ்டாப் வெச்சுட்டாங்க. ஆனா, இப்ப ஆரம்பிச்சதும் உடனே தேசிய விருது வாங்குற அளவுக்கு பெர்ஃபார்ம் பண்றாங்க. அவங்க எப்பவுமே சும்மா இருந்தது இல்லை. படிப்பு, காஸ்ட்யூம்னு இழுத்துப் போட்டுக்கிட்டு ஏதாச்சும் பண்ணிட்டே இருப்பாங்க. சென்னையில் அப்பா பக்கத்திலேயே இருப்பதால், கொஞ்சம் அப்பா பேச்சு நிறைய இருக்கும். அவ்வளவுதான்!
தங்கச்சி அக்ஷரா ஆரம்பத்திலேயே டைரக்ஷன் பக்கம் இறங்கிட்டாங்க. நீங்க அவங்களுக்கு டிப்ஸ் கொடுப்பீங்களா... இல்லை அவங்க உங்க நடிப்பை கமென்ட் பண்ணுவாங்களா?
எதுவுமே இல்லை. அப்பாவுக்கு எப்பவும் அதெல்லாம் பிடிக்காது. ஒவ்வொருத்தரையும் தனி மனிதரா ட்ரீட் பண்றதுதான் அப்பா பழக்கம். நான் நடிப்பில், சினிமாவில் எதுவும் சந்தேகம் வந்தா... அப்பாகிட்ட கேட்பேன். அது ரொம்ப சின்ன கம்யூனிகேஷனா இருக்கும். அவ்வளவுதான்! அதுக்காக ஒவ்வொரு விஷயத்துக்கும் 'அப்பா ப்ளீஸ்'னு அவர்கிட்ட போய் நிக்க மாட்டேன். 'என் 50 வயசுக்கு நிறைய அட்வைஸ் உங்களுக்குக் கிடைக்கும். ஆனா, அதுக்கு நேரம் இல்லாதபடி, அவசியம் இல்லாதபடி பார்த்துக்கங்க!'னு சொல்வார். அக்ஷரா செம ஷார்ப். விளம்பரங்கள், படங்கள்னு ரொம்ப உற்சாகமா இருக்கா. என்கிட்ட ஏதாவது கேட்டா... நான் பதில் சொல்வேன். மத்தபடி நாங்க ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்!
தனுஷுக்கும் உங்களுக்கும் சம்திங் சம்திங்னு பரபரப்பா இருக்கு. இதுக்கு ஸ்ருதியின் பதில் என்ன?
நத்திங்! இது மாதிரியான எந்த விஷயங்களுக்கும் நான் ரியாக்ட் பண்றது இல்லை. குறிப்பா, இப்ப நான் எதுவும் பண்ணவே போறது இல்லை. அப்படி எதுவும் பண்ணினால், அதுக்கு முடிவே இல்லை. போய்க்கிட்டே இருக்கும். நான் நல்லா நடிக்கிறேனா, நல்லாப் பாடுறேனான்னு மட்டும் பாருங்க. அதுல எதுவும் மிஸ்டேக் இருந்தா சொல்லுங்க.... 'அப்படிங்களா... சரி பண்ணிக்கிறேன்'னு கேட்டுப்பேன். இந்த விஷயத்துல அப்பாகிட்ட நான் கத்துக்கிட்ட அமைதிதான் இப்போ எனக்கு உதவியா இருக்கு. நான் என் வேலையில் மட்டுமே கவனமா இருக்கேன். அதை இன்னும் பெட்டர் ஆக்க என்னலாம் முயற்சிகள் எடுக்கணுமோ, அதை மட்டும் பண்ணுவேன். மத்தபடி அப்பா கொடுத்த அந்த அமைதி அட்வைஸ் இருக்கு. அதுக்கு மேல எனக்குக் கவலை எதுக்கு?


Read More Add your Comment 0 comments


'துப்பாக்கி'ல வேற ஒரு விஜய்யை பார்க்கலாம்! - விஜய்




 Tamil Celebrity I'M THE BULLET IN THUPPAKI MOVIE: VIJAY விஜய். கோடம்பாக்கத்தின் 'என்டர்டெயின்மெண்ட் ராக்கெட்'. ஷங்கருக்காக நண்பனாகி பட்டையைக் கிளப்பியவர். இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி'யில் தோட்டாவாக சீறிப் பறக்கப் போகிறார். மும்பையில் முகாமிட்டிருந்த விஜய்யிடம் பேசினோம்...
ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?
முதல்ல எனக்கு லேசான தயக்கம் இருந்தது. ஷூட்டிங் ஆரம்பிச்சதுமே அது மாறிடுச்சு. காரணம், ஷங்கர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல அதையும் தாண்டி பிர்லியண்டானவர். உலகத்துல எது நடந்தாலும் அதைத் தெரிஞ்சு வைச்சுக்குறார். அது சினிமாவுக்குத் தொடர்பில்லாத விஷயமானாலும்கூட தெரிஞ்சுக்க விரும்புறவர். செட்ல அவர் வேலை செய்யற விதமே தனி. பல தடவை நான் பார்த்து பிரமிச்சிருக்கேன் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பீல் பெர்க்குனே சொல்லலாம். அந்தளவுக்கு உழைக்கிறார். இது மறுக்க முடியாத உண்மை. நம் தமிழ் இயக்குநர் இந்தளவுக்கு உயரே வந்திருப்பது பெருமைதான்.
அடுத்து இதே போல் வேறு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
இந்தக் கதை ஏற்கெனவே படமாகி இருந்ததால் தமிழில் நடிக்க எந்தத் தயக்கமும் எனக்கு இருக்கவில்லை. அதே சமயம் என் ரசிகர்களையும் இந்தப் படம் திருப்திப்படுத்தும். இனி அடுத்தடுத்து என் ரசிகர்களை குஷிப்படுத்தும் படங்களில் கவனம் செலுத்துவேன். அழுத்தமான கதை அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் நடிப்பது பற்றி யோசிப்பேன். இது ஆரோக்கியமான விஷயம்தானே. 'வேலாயுதம்' படம் எடுக்கும்போது 'ஜெயம்' ரவி என் காட்சிகளை எப்படியெல்லாம் பில்ட்-அப் பண்ணலாம் என்று சொல்லியிருக்கார். அவரும் ஒரு ஹீரோதான். ஆனால், இன்னொரு ஹீரோவுக்கு காட்சி நல்லா வரணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்.
நண்பனில் அமீர்கானைத் தாண்டி விட்டதாக நினைக்கிறீங்களா?
அவர் நடிப்பைத் தாண்டி பண்ணிட்டதா நினைக்கல. காரணம், அவர் வேற ஒரு இடத்துல இருக்கார். அவரோட சேர்த்து பேசுறது நல்லதா படல. என் ஸ்டைல்ல நடிப்பை வெளிக்கொண்டு வந்துருக்கேன். நிச்சயம் ஹிந்திப் படம் பார்த்தவங்களே இந்தப் படத்தை புதுப் படம் மாதிரி நினைச்சுப் பார்ப்பாங்க.
ஷங்கரோடு மீண்டும் இணையும் திட்டம் இருக்கா?
ஏன், சேர்ந்து பண்ணினால் என்ன.. நல்ல கதை அமைந்தால் போதும். இப்ப இல்லை 'முதல்வன்' படத்திலேயே கேட்டார். என்னால நடிக்க முடியாமல் போயிடுச்சு. அதற்கே ரொம்ப வருத்தப்பட்டேன். அதனாலதான் 'நண்பன்' படத்துலயும் அப்படி ஆகிடக் கூடாதுன்னு உடனே நடிச்சேன்.
'துப்பாக்கி' எப்படி இருக்கும்..?
கண்டிப்பா இது வேற ஒரு விஜய்யை உங்களுக்குக் காட்டும். அதோட என் ரசிகர்களுக்கு பெரிய விருந்தா இருக்கும். துப்பாக்கியில் நான்தான் புல்லட்! இப்போதைக்கு இது போதும், என்று முடித்தார் விஜய்!.


Read More Add your Comment 0 comments


'சகுனி' கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவன்! - கார்த்தி




 Tamil Celebrity NO CRITICS IN SAGUNI MOVIE SAYS KARTHI ப்ரணிதாவோடு சேர்ந்து கொண்டு சரியான 'சகுனி' வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கார்த்தி. காதல்தான்.. தப்பா நினைக்காதீங்க. ஒரு எதிர்மறையான தலைப்பு உள்ள படத்தில் பெரிய ஹீரோ நடிப்பது அரிதானது. ஆனால் கார்த்தியின் தேடலும் மெனக்கெடலும் இப்படியொரு வித்தியாசமான முயற்சியில் அவரை இறங்க வைத்திருக்கிறது. அந்த விஷயத்தில் கார்த்தி இன்னொரு சூர்யா.
'சகுனி' படப்பிடிப்பில் கார்த்தியை சந்தித்தோம்.
'சகுனி' நல்லவனா கெட்டவனா?
கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவன். ஆனா அவன் நல்லவன்னு தெரியறதுக்குள்ள உங்கள படுத்தி எடுத்திருவான். அதை தாங்கித்தான் ஆகணும். கிராமத்திலிருந்து கிளம்பி வரும் ஒருத்தன் சென்னைக்குள் புகுந்து எப்படி ஜெயிக்கிறான் என்பது கதை. இதுல அரசியல் என்கிற புது தளம் எனக்கு கிடைச்சிருக்கு. அரசியலால் மாறிப் போன அவன் பல பேர் வாழ்க்கையையே மாற்றுகிறான்.
பரபரப்பாக பேசப்படும் அரசியல் ஊழல் இந்தப் படத்திலும் இருக்கிறதா கேள்விப்பட்டோமே?
படம் முழுக்க அரசியல் இருக்குமே தவிர சீரியஸாக யாரையும் விமர்சனம் செய்யல. என்னைச் சுற்றியுள்ள கேரக்டர்கள் அரசியல்வாதிகள். காமெடி தான் நோக்கம். படம் முழுக்க சிரிப்புச் சரவெடி கொளுத்தப் போறோம் நானும் சந்தானமும். மற்றபடி எந்த அரசியல் தலைவரையும் குறிப்பிடல. எந்த ஊழல் சம்பவத்தையும் சொல்லல.
உங்க புது மனைவி ரஞ்சனி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றாங்களா?
பெரும்பாலும் நான் வெளியூர்லயே இருக்க வேண்டியிருப்பதால ரஞ்சனியையும் கூட கூட்டிட்டுப் போயிடுவேன். என்கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் ஒவ்வொரு ஊர்லயும் இருக்காங்க. அவங்க ஃபேமிலியோட என் மனைவி நல்லா செட் ஆகிடுறாங்க. ஷூட்டிங் முடியுற வரைக்கும் அவங்க வீட்லயே தங்கிக்குவாங்க. எப்பவாவது திடீர்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்பாங்க.
ப்ரணிதா நல்லா செட் ஆகிட்டாங்களா...?
நல்ல பொண்ணு. பிரமாதமா நடிக்கிறாங்க.. நல்லா டான்ஸ் ஆடுறாங்க. இதுவரைக்கும் தமிழ் சினிமா காலடி படாத நாடு போலந்து. அந்த நாட்டுல பாட்டு சீன் எடுத்தோம் மைனஸ் டிகிரி குளிர். இதுல ப்ரணிதாவோடு டூயட்டுக்கு எப்படி வாயசைக்கிறது. வாயைத் திறக்கவே முடியல. தந்தியடிக்குது. அதோடு ப்ரணிதாவோடு டூயட்டை முடிச்சேன்.
சூர்யாவும், நீங்களும் சேர்ந்து நடிக்கிற திட்டம் என்னாச்சு?
ரெண்டு பேரும் வீட்ல ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடவே முடியல. அப்புறம் எப்படி சேர்ந்து ஒர்க் பண்றது. அவரு ரஷ்யாவில் இருந்து போன் பண்றார். நான் கேரளாவிலிருந்து அவருக்குப் பேசுறேன். இப்படி ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிக்கிட்டிருக்கோம். அடுத்து எனக்கு ராஜேஷ் படம் இருக்கு. அண்ணனுக்கு 'மாற்றான்' முடிந்த பிறகு 'சிங்கம்' ரெண்டாம் பாகம் இருக்கு. அதனால நேரம் கிடைச்ச பிறகு பார்க்கலாம்.


Read More Add your Comment 0 comments


நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு! - சமீரா ரெட்டி




 Tamil Celebrity I WANT TO DANCE WITH DANCE KING VIJAY: SAMEERA REDDY தமிழ் ரசிகர்களை குறிவைத்து 'வேட்டை'யில் கிறங்கடித்த சமீரா, ஃப்ளைட்டைப் பிடிக்க ஜிவ்வென்று கிளம்பிக்கொண்டிருந்தார். அவரது வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் ஜெட் வேக கேள்விகளைக் கேட்டோம். படபடவென பதில் கொடுத்தார், விஸ்கி நிறத்தில் போதையூட்டும் சமீரா. செல்லமா 'சாம்'.
உங்களைப் பத்தி ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்?
நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு. மனசுல பட்டதைச் சொல்ற கேரக்டர்.
ஜிவ்வுன்னு இருக்கீங்களே.. உங்களுக்குப் பிடிச்சது கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர் கேரக்டரா இல்ல ஹோம்லி கேரக்டரா?
உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கணும்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலின்னு எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீங்களே. எப்படி மொழி தெரியாம சமாளிக்கிறீங்க?
மொழி ஒரு பிரச்சினையே இல்ல. எமோஷனை பக்காவாக புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடிச்சாலே போதும்.
கிளாமராக நடிக்கிறது ஈஸிதானே?
ஹலோ பாஸ், யார் அப்படிச் சொன்னது?
யார் கூட நடிக்கணும்னு ஒரு தீராத ஆசை இருக்கு?
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கூட நடிச்சே ஆகணும்.
யார் கூட கொண்டாட்டமா ஒரு ஆட்டம் போட ஆசை?
டான்ஸ் கிங் விஜய் கூட கலக்கல் ஆட்டம் போடணும்.
எப்போதும் கேம் விளையாடிக்கிட்டு, ரொம்ப ஜாலியா, விளையாட்டுத்தனமாகவே இருக்கீங்களே?
ம்ம்ம்.. எனக்கு கேம்ஸ்தான் பொழுதுபோக்கு. இந்த 'ஆங்க்ரி பேர்ட்ஸ்' கேம் விளையாடுறதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னே தெரியல.
வீரதீர சாகசத்திலும் நீங்க கில்லாடின்னு கேள்விப்பட்டோமே?
ஆமா. ஸ்கூபா டைவிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமையல் விஷயத்திலும் அதிரடியாக இறங்குறது எனக்குப் பிடிச்ச விஷயம்.
அலட்டல் இல்லாம கிறங்கடிக்கிற அழகுக்கு என்ன காரணம்?
கொஞ்சமா சாப்பிடுவேன். ரெகுலராக யோகா பண்றேன். அம்மாவுக்கு ஆயுர்வேதம் முறை தெரியும். அதனால ஆரோக்கியத்துக்கும் பிரச்சினை இல்ல.
உங்க பர்ஸனாலிட்டிய பார்த்தா லவ் மேரேஜ்தான் பண்ணுவீங்க போலிருக்கு?
கைக் கொடுங்க தலைவா.. சரியா சொன்னீங்க.


Read More Add your Comment 0 comments


கிளாமரையும் விட்டு வைக்க மாட்டேன்! - மதுஷாலினி




 Tamil Celebrity I WANT TO DO MEATY ROLES: MADHU SHALINI ஹாய்ய்ய்ய்ய்ய்.... நல்லா இருக்கீங்களா? நான் ரொம்ப நல்லாயிருக்கேன். விஜய் சார் 'நண்பன்' ரிசல்ட் எப்படியிருக்கு? 'தல' அஜித்தின் 'பில்லா -2' போஸ்டர் கலக்குதாமே? 'மங்காத்தா'வுக்கு இருந்த ஓப்பனிங் இதுவரைக்கும் எந்த சினிமாவுக்கும் இல்லையாமே நிஜமா? தமிழ் சினிமா பத்தி எதுவும் தெரியலைப்பா. இப்ப ராம்கோபால் சார் டைரக்ஷனில் நடிக்கிறேன். சீக்கிரமே தமிழ்நாட்டுக்குப் பறந்து வந்துடுவேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா ப்ளீஸ்... மழலை மொழிக் கவிதையாக இருக்கிறது மதுஷாலினியின் பேச்சு. அவரின் கொஞ்சலான கெஞ்சலுக்காகவே ஒரு யுகம் காத்திருக்கலாம் போலிருக்கிறது.
பாலா பட ஹீரோயினுக்கு இங்கே நல்ல இடம் இருக்கும். ஆனால் நீங்களும் ஜனனி அய்யரும் ஆளையே காணுமே?
பாலா படத்துல நடிச்சா நல்ல இடம் கொடுப்பாங்கன்னு நீங்க சொல்றது உண்மைதான். அதன் படியே நிறைய படங்கள் எனக்கும் வந்தது. 'அவன் - இவன்' படத்தைப் போல அப்பாவி கேரக்டர் நிறைய..... நான்தான் மறுத்து விட்டேன். நல்ல படம் கொடுங்கன்னு யார்க்கிட்டேயும் கேட்க முடியாது.
'அவன் - இவன்' எனக்கு நல்ல விசிட்டிங் கார்டு. அதை வெச்சுக்கிட்டு நான் சும்மா வந்து போகிற படத்துல நடிச்சு, இருக்குற பெயரைக் கெடுத்துக்க முடியாது. அப்படி நடிக்கவும் தேவையில்லை. நான் எலக்ட்ரானிக் இன்ஜீனியரிங் படிச்ச பொண்ணு. இப்பவும் வேலைக்கு நிறைய ஆஃபர் இருக்கு. ஆனா சினிமாதான் முக்கியம்ன்னு வந்துட்டேன்.
சினிமா ஆசையைச் சொன்னதும் வீட்டுல முதலில் பயந்தாங்க. அப்புறம் ஏத்துக்கிட்டாங்க. நீங்க சொல்லுகிற மாதிரி தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும். அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன். 'அவன் - இவன்' படத்தில் என்கூட நடித்த ஜனனி அய்யரிடம் பேசினேன். அவங்களும் இப்ப ஒரு நல்ல படத்துல நடிக்கிறதா சொன்னாங்க.
சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ, திடீர்ன்னு பெரிய டைரக்டர்னு வித்தியாசம் இல்லாமல் நடிக்கிறீங்களே?
கதை, அதில் என் கேரக்டர் என்னன்னு மட்டும்தான் பார்ப்பேன். ஹீரோ யார்ன்னு கூடப் பார்க்க மாட்டேன். ஹீரோ பற்றி விசாரித்து நடிக்கிறது நல்ல நடிகைக்கு அழகல்ல. மதுஷாலினிதான் இப்படி வெரைட்டியா நடிப்பாங்கன்னு சொல்றதைக் கேட்கணும்ன்னு பெருமையா இருக்கு. நீங்க கேட்டதில் சந்தோஷம். நல்லா அறிமுகமான ஹீரோவுடன் ஒரு படம். அடுத்து என் கேரக்டருக்காக ஒரு படம், திரும்பியும் இன்னொரு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் போதுதான் என் கிராஃப் எப்படியிருக்குன்னு எனக்கே தெரியும். பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர் படங்களில் மட்டும்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கக் கூடாது. அது ஒரு இடத்தில் நிற்க வைத்து விடும். நல்ல படம் வந்தால் கிளாமரையும் நான் விட்டு வைக்க மாட்டேன்.
அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால்னு நிறைய பேர் கிளாமர் வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவதேயில்லை.. அதனால்தான் நீங்களும் கிளாமருக்கு ஓ.கே. சொல்றீங்களா?
நீங்க சொல்ற அதே அனுஷ்காதான் 'அருந்ததி', 'வானம்' படங்களில் கேரக்டர் ரோல் பண்ணினாங்க. சினிமா நடிகை கிளாமருக்கு ஆசைப்படுவது சகஜம்தான். ஆனால் யாரும் எல்லை மீறலை. ஏன் த்ரிஷாவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' பண்ணினாங்க. வெறும் கேரக்டர் ரோலா பண்ணிக்கிட்டு இருக்குற அஞ்சலிகூட இப்ப ஒரு படத்துல கிளாமரா டான்ஸ் ஆடியிருக்காங்களாமே? எல்லோருக்கும் கிளாமர் ஆசை இருக்கும். அது எனக்கும் இருக்கு. இப்பவும் என் சாய்ஸிஸ் கேரக்டர் ரோல், கிளாமர் இரண்டுக்கும் இடம் உண்டு.
உங்களுடைய சக நடிகைகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க. யார்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?
ஏன்னா எனக்கு யார்க்கிட்டேயும் சண்டை கிடையாது. ரிலாக்ஸா அரட்டை அடிச்சு பேசிக்க யாருக்குமே டைம் இல்லை என்பதுதான் உண்மை. எப்போதாவது விழாக்களில் பார்க்கும் போது ஹாய் சொல்லிப்போம். படம் பார்த்தா நிறை, குறைகளைக் சொல்லிப் பேசுவாங்க.
ஜனனி அய்யர் எனக்கு நல்ல ப்ரெண்ட். ஆனா இப்ப எஸ்.எம்.எஸிஸ் மட்டும்தான் பேசிக்குறோம். பூனம் பஜ்வா, அமலா பால், சமீரா ரெட்டி, சமந்தானு பெரிய லிஸ்ட் இருக்கு. எல்லோரும் செம சேட்டைக்காரிங்க. எப்போதாவது மீட் பண்ணுனா, பார்ட்டி, பீச்ன்னு ஆட்டம் போடுவோம். ஆனா வீட்டுக்கு வந்துட்டா நான் மட்டும் குட் கேர்ள்.
மதுஷாலினியின் காதல்கள்...?
என்னங்க இது காதல்கள்னு சொல்றீங்க. நான் என்ன பத்து பதினைந்து பேரையா லவ் பண்றேன். மீடியா ஆட்கள் ரொம்ப மோசம்ப்பா. எப்பவும் இந்த கேள்வியை மிஸ் பண்ணவே மாட்றாங்க. எப்பவும் இதைத்தான் கேட்கிறாங்க.
அதனால் வழக்கம் போல் நான் சொல்லும் பதிலையே சொல்லி விடுகிறேன். நோட் பண்ணிக்கோங்க.... காதலிக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் வயசாகலைப்பா. நான் ரொம்ப சின்ன பொண்ணு புரியுதா? உடனே என்ன வயசுன்னு அடுத்த கேள்வி கேட்காதீங்க. அதுக்கு நீங்க வேற ஆளத்தான் பார்க்கணும்.


Read More Add your Comment 0 comments


கவர்ச்சியான இமேஜுக்கு இயக்குநர்கள்தான் காரணம்: ஸ்ரேயா அதிரடி! (I need to keep doing good work: Shriya Saran )



I need to keep doing good work: Shriya Saran கவர்ச்சி வேடத்தில் எனக்கு விருப்பமில்லை. இயக்குநர்கள்தான் அப்படி நடிக்க வைத்தார்கள் என்றார் ஸ்ரேயா. இது பற்றி அவர் கூறியதாவது: ஸ்ரேயா என்றதும் கவர்ச்சியான இமேஜ்தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக்குநர்கள்தான் என்னை அதுபோல் நடிக்க வைத்தனர். விருது பெறும் நடிப்பை வெளிப்படுத்தும் வேடம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம். இனிமேல் அதுபோன்ற வேடங்கள் வரும் என்று நம்புகிறேன். அஜித், சூர்யாவுடன் இதுவரை நடிக்கவில்லை. அவர்களுடன் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். நடிப்பை விட்டு விலகுவதற்கான எண்ணம் எனக்கு இல்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த ஆண்டு தெலுங்கில் 'லைஃப் ஈஸ் பியூட்டிபுல்', மற்றும் தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ரன்' படங்கள் வெளிவரவுள்ளன. இயக்குநர்கள் மேல குற்றச்சாட்டு வக்கிறீங்களே ஒங்களுக்கு எங்க போச்சு? ம்ஹும்.. மெழுகுவர்த்தி மண்விளக்குக்கு ஆசப்பட்டுச்சாம்!


Read More Add your Comment 0 comments


நான் எப்பவும் இயக்குநரின் நடிகை! - அஞ்சலி




 Tamil Celebrity I AM DIRECTOR'S ACTRESS: ANJALI "காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு என்னைப் பத்தி கன்னாபின்னானு நியூஸ் எழுதுறாங்க. அப்புறம் என்கிட்டயே வந்து, 'நீங்க ஏன் முன்ன மாதிரி மீடியா ஃப்ரெண்ட்லியா இல்லை?'னு கேட்கிறாங்க"- அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்தாலும், அம்புட்டு அழகாக இருக்கிறார் அஞ்சலி.
மாஸ் ஹீரோ, அறிமுகம்னு கலந்துகட்டி நடிக்கிறீங்களே... என்னதான் ஐடியா உங்க மனசுல?
'கற்றது தமிழ்' ஆனந்தி, 'அங்காடித் தெரு' கனி, 'எங்கேயும் எப்போதும்' மணிமேகலை மாதிரி உங்களுக்காகவே ஒரு கேரக்டர் பண்ணியிருக்கோம். அதுல நீங்க மட்டும்தான் செட் ஆவீங்கனு கேட்டு, எத்தனையோ புது இயக்குநர்கள் வர்றாங்க. அதேநேரம், 'பவர்ஃபுல் ப்ளஸ் செம கிளாமர் கேரக்டர். ரெண்டையும் ஒரே ஆளா உங்களாலதான் சமாளிக்க முடியும்'னு சீனியர்ஸ் வர்றாங்க. அப்போ நான் போற ரூட் கரெக்ட்தானே? நான் எப்பவும் இயக்குநரின் நடிகை. அவ்வளவுதான்!
போற ரூட் எல்லாம் சரின்னா, அப்போ ஏன் தமிழின் டாப் ஸ்டார் ஹீரோக்களுடன் அஞ்சலி இன்னும் நடிக்கலை?
தெலுங்கில் வெங்கடேஷ், மகேஷ் பாபுனு ரெண்டு பேருமே டிரெண்ட் செட்டர் ஹீரோஸ். அவங்க ரெண்டு பேரும் முதல்முறையா சேர்ந்து நடிக்கும் 'சீதம்மா வகிட்லே ஸ்ரீமல்லி செட்டு' படத்தில் நான் நடிக்கும் கேரக்டர்தான் சீதம்மா. மாஸ் ஹீரோக்கள் ரெண்டு பேர் என் கேரக்டர் பேரோட ஆரம்பிக்கிற படத்தில் நடிக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்? தமிழிலும் அந்த மாதிரி நிலை வரும்!
இப்போ தமிழ்ல என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?
சுந்தர்.சி சார் இயக்கும் 'மசாலா கஃபே' படத்தில் விமல், சிவா ரெண்டு பேருமே ஹீரோ. சுந்தர் சாரின் வழக்கமான காமெடி கலக்கல் படம். இதில் நான் ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்றேன். அப்புறம் முருகதாஸ் சார்கிட்ட '7ஆம் அறிவு' வரை வேலை பார்த்த கின்ஸ்லே இயக்கும் படத்தில் நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி சரவணன்தான் ஹீரோ. இதில் 'எங்கேயும் எப்போதும்' மணிமேகலைக்கு நேரெதிர் கேரக்டர்!
காதல், கல்யாணம்னு உலவுற வதந்திகளுக்கு நீங்களே பதில் சொல்லிடுங்களேன்...
அதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனா, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு, நான் ரசிச்சு ரசிச்சு நடிக்கிற அளவுக்கு நல்ல நல்ல படங்கள் கையில் இருக்கு. முதல்ல அதுல வர்ற ஹீரோக்களைக் காதலிச்சுட்டு வர்றேன். அப்புறம் ரியல் லைஃப் ஹீரோ யார்னு பார்க்கலாம்!


Read More Add your Comment 0 comments


 

About Me

Our Partners

© 2013 cinema All Rights Reserved Tamilgunda Inc Created by Hosting King